Baakiyalakshmi: பாக்கியாவை பாராட்டிய அமைச்சர்.. சந்தோஷத்திற்கு உலை வைத்த கணேஷ்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
இந்த சீரியலில் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை பெற்ற பாக்கியா மிகச்சிறப்பாக அதை நடத்தி முடித்துள்ளார்.

பொருட்காட்சியின் இறுதி நாளில் பாக்கியாவின் கேன்டீனுக்கு மறுபடியும் வரும் அமைச்சர், அவரை பாராட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு அதிகமான உற்சாகத்தை கொடுக்கும்வகையில் அமைந்துள்ளது. இந்த சீரியலில் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை பழனிச்சாமி உதவியுடன் பெறுகிறார் பாக்கியா. அந்த கேன்டீனை நடத்த முடியாதபடி சக கான்டிராக்டர், பாக்கியாவிற்கு இடைஞ்சலை ஏற்படுத்த, அதிலிருந்து மீண்டு, மீண்டும் கேன்டீனை நடத்துகிறார்.
பாக்கியாவை பாராட்டிய அமைச்சர்: இதனிடையே இந்த பொருட்காட்சியின் ஹைலைட்டாக பாக்கியாவின் ஈஸ்வரி புட்ஸ் கேன்டீன் அமைகிறது. மக்கள் அவரது கேன்டீனில் சாப்பிடுவதற்காகவே அடுத்தடுத்து பொருட்காட்சிக்கு வந்ததாக கூறுகின்றனர். இதனிடையே இன்றைய எபிசோடில் பொருட்காட்சியின் இறுதி நாளில் பாக்கியாவின் கேன்டீனுக்கு அமைச்சர் வந்து பாக்கியாவை பாராட்டுவதாக அமைகிறது. இந்த நிகழ்வு மற்றும் அமைச்சர் பாராட்டும் பேட்டி டிவியில் ஒளிபரப்பாகிறது.
கண்கலங்கிய ஈஸ்வரி: இதனால் பாக்கியாவிற்கு அதிகமான புகழ் கிடைக்கிறது. பொருட்காட்சியின் கேன்டீனுக்கு வர மாட்டேன் என்று முன்னதாக அழிச்சாட்டியம் செய்யும் ஈஸ்வரியும், இந்த பேட்டியை பார்த்து பாக்கியாவை பாராட்டுகிறார். மேலும் அவர் பாக்கியாவின் இந்த வளர்ச்சியை நினைத்து கண்கலங்கியதையும பார்க்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாமல் பொருமுகிறார் கோபி. இதனிடையே இந்த செய்தியை படம்பிடித்து ஜெனிக்கு அனுப்புகிறார் செழியன்.
சந்தோஷத்தில் பாக்கியா: இதை பார்த்துவிட்டு பாக்கியாவிற்கு பாராட்டு தெரிவித்து பதில் மெசேஜ் அனுப்புகிறார் ஜெனி. அவரது இந்த ரிப்ளை செழியனுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அமைச்சர் வந்து சென்றவுடன் பாக்கியாவை அனைவரும் பாராட்டுகின்றனர். இந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறார் பாக்கியா. அவருக்கு தொடர்ந்து பழனிச்சாமி, எழில், இனியா என அடுத்தடுத்த நபர்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். இந்த சந்தோஷத்தை அவர் தொடர்ந்து அனுபவிக்க முடியாதபடி அங்கு கணேஷ் வருகிறார்.
அச்சுறுத்தும் கணேஷ்: இதனால் மிகுந்த கவலையுடன் பாக்கியா, எழில் மற்றும் அமிர்தாவை அங்கிருந்து வீட்டிற்கு செல்லும்படி பதற்றத்துடன் கூறுவதாக தற்போதைய எபிசோட் காணப்படுகிறது. தான் இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு அந்த தருணத்தின் மகிழ்ச்சியை அனுபவித்துவிட்டு செல்வதாக எழில் கூற, அதை அனுமதிக்காமல் அவர்களை வெளியேற்றுகிறார் பாக்கியா. இதையடுத்து பாக்கியாவிடம் பேசும் கணேஷ், அவர் கேட்ட ஒருமாத காலம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதாக மீண்டும் எச்சரிக்கிறார்.
விரைவில் எண்ட்-கார்ட்?: இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா முழிப்பதாக காணப்படுகிறது. பெங்காலியில் ஸ்ரீமோயி என்ற வெற்றிபெற்ற தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களுக்கு அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்துள்ள நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











