Baakiyalakshmi serial: ஜெயிலுக்கு போகக்கூட தயங்கமாட்டேன்.. மாலினியை நேருக்கு நேர் எச்சரித்த செழியன்!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருவது தெரிந்த விஷயம். இந்த சீரியலில் தன்னுடைய கணவன் கைவிட்ட போதிலும் தன்னை விவாகரத்து செய்த போதிலும், தான் நம்பும் தன்னுடைய சமையல் பிசினஸை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு முன்னேறி வருகிறார் பாக்கியலட்சுமி. மசாலா பிசினஸில் துவங்கி கேன்டீன் காண்ட்ராக்ட், சமையல் காண்ட்ராக்ட் என அவர் ஒவ்வொரு விஷயமாக படிப்படியாக முன்னேற்றம் கண்டு தற்போது ரெஸ்டாரெண்ட் துவங்கியுள்ளார். அந்த ரெஸ்டாரண்டிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் பாக்கியா.
அவருக்கு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் நண்பர் பழனிச்சாமியும் சிறப்பாக கைக்கொடுத்து வருகிறார். பழனிச்சாமியும் பாக்கியாவும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று செல்வி, எதில் உள்ளிட்டவர்கள் நினைக்கின்றனர். இதனிடையே செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து மாலினி இடையூறு செய்து வருகிறார். இதனால் ஜெனிக்கு மறுமணம் செய்ய அவரது அப்பா ஜோசப் முயற்சி மேற்கொள்கிறார். இதனால் ஆத்திரமடையும் செழியன் மாலினி வீட்டிற்கு சென்று அவரை மிரட்டுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஆயிரம் எபிசோட்களை கடந்து முன்னணி சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் பாக்கியாவின் வளர்ச்சியும் கோபியின் வீழ்ச்சியும் என கதைக்களத்தை தொடர்ந்து அமைத்து வந்தார் இயக்குனர். இந்நிலையில் பாக்கியா உணவுத் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பார்த்து கோபிக்கும் அதன் மீது ஆசை வந்துவிட்டது. அவர் தற்போது ராதிகா உதவியுடன் கிளவுட் கிச்சனை துவங்கியுள்ளார். மசாலா பிசினஸில் இருந்து தற்போது ரெஸ்டாரெண்ட் திறப்பு வரை பாக்கியா படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.
பாக்கியாவின் அடுத்தடுத்த சவால்கள்: தன்னுடைய ரெஸ்டாரெண்டை அமைச்சரைக் கொண்டு திறந்து வைத்த பாக்கியா, இதன் மூலம் அதிகமான கவனம் பெற்றுள்ளார். இருந்தபோதிலும் அவரது ரெஸ்டாரெண்ட் அந்த அளவிற்கு பிக்கப் ஆகாத நிலை காணப்படுகிறது. இ,துகுறித்த காரணத்தை ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ரெஸ்டாரெண்ட் முன்பு கார் பார்க்கிங் இல்லாததுதான் அதற்கு காரணம் என்பதை தற்போது கண்டறிந்துள்ளார். இது ஒருபுறமிருக்க செழியன் மற்றும் ஜெனியின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண்பதற்காக அவர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
செழியன் -ஜெனி விவாகரத்து வழக்கு: எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் கணேஷ் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சனையில் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இவர்களது விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது. அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க நீதிமன்றம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இருவருக்கும் வெகுவிரைவில் விவாகரத்தை பெற்றுக் கொடுத்து ஜெனிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அப்பா ஜோசப் முயன்று வருகிறார்.

மாலினியை எச்சரிக்கும் செழியன்: இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஜெனி வீட்டிற்கு சென்று செழியன் நியாயம் கேட்க அவரை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் ஜோசப். இதனால் ஆத்திரமடையும் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் செழியனுக்கும் மறுமணத்திற்கான ஏற்பாடுகளை செய்கின்றன. இதனால் ஆத்திரமடையும் செழியன், இவற்றிற்கெல்லாம் காரணமான மாலினி வீட்டில் சென்று சண்டையிடுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தனக்கு திருமணமான உண்மையை தான் மறைத்தேனா என்று மாலினியிடம் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து சண்டையிடும் செழியன், தன்னை ஜெனி பிரிய நேர்ந்தால் அதற்கு காரணமான மானினியை கொலை செய்து செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்ல கூட தான் தயங்க மாட்டேன் என்றும் கூறுகிறார். இதனால் மாலினி அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
தவிக்கும் பாக்கியா: இதனிடையே செழியனை பின் தொடர்ந்து வந்த எழில் அவர்களின் இந்த சண்டையை பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்கிறார். இதனிடையே ஜெனியின் அம்மா மரியத்தை அவரது கல்லூரியில் சென்று சந்திக்கிறார் பாக்கியா. செழியன் மற்றும் ஜெனி விவகாரத்தில் இருவரையும் பேச வைத்தால் ஒரு தெளிவு கிடைக்கும் என்றும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் பாக்கியா கூறுகிறார். ஆனால் இதை மரியம் ஏற்க மறுக்கிறார். தன்னுடைய கணவர் ஜோசப் இதற்கு உடன்பட மாட்டார் என்றும் மரியம் கூறிவிடுகிறார். இதனால் இந்த பிரச்சனையில் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா தவிக்கிறார்.


Click it and Unblock the Notifications











