Baakiyalakshmi serial: ராதிகாவிற்கு தெரியவந்த கோபி குறித்த உண்மை.. சிக்கினான்டா சேகரு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாஸ் காட்டிவரும் பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருடன் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கமம் எபிசோட்களை கொடுத்துவந்த பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அமிர்தா மற்றும் நிலாவை கணேஷ் கடத்தி அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்ய முற்பட்ட நிலையில், அதிரடியாக பழனிச்சாமி உதவியுடன் எழில் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டனர். இதையடுத்து கணேஷ் சிறைக்கு சென்றார்.
இதையடுத்து ரெஸ்டாரெண்டை துவங்கும் வேலைகளில் பாக்கியா ஈடுபட்டுள்ளார். அவரது இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அவரை ராதிகாவிடம் திட்டித் தீர்க்கிறார். தன்னுடைய மகன்களிடமும் பாக்கியாவை மட்டம் தட்டி அவர் பேச முற்பட, அவர்களால் அதை பொறுக்க முடியவில்லை. கோபியையே அவர்கள் பதிலுக்கு திட்டியதை பார்க்க முடிந்தது. நீண்ட நாட்களாக தன்னுடைய அலுவலகத்தை மூடியதை குடும்பத்தினரிடம் குறிப்பாக ராதிகாவிடம் மறைத்து வந்த கோபி தற்போது வசமாக சிக்கியுள்ளார். இதுகுறித்து இன்றைய எபிசோடில் பார்க்க முடிந்தது. இதையடுத்து கோபி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் தொடர்ந்து 2வது இடத்தை தக்க வைத்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த சீரியலில் அடுத்தடுத்து பரபரப்பு குறையாமல் இயக்குநர் பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கமம் எபிசோட்களுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருடன் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்திருந்தது. இதன்போது கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தை முன்னின்றி நடத்தி வைத்தார் பாக்கியா. இதையொட்டி அவரது மாமியார் மற்றும் கோபியிடமும் திட்டு வாங்கினார். தொடர்ந்து அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷின் சதித்திட்டத்தில் சிக்கியதையும் பார்க்க முடிந்தது.
மீட்கப்பட்ட அமிர்தா & நிலா: தன்னுடைய பெற்றோரின் துணையுடன் பாக்கியாவை நயவஞ்சகமாக ஏமாற்றி, அமிர்தா மற்றும் நிலாவை கடத்திய கணேஷ், தொடர்ந்து அமிர்தாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயன்றார். பழனிச்சாமியின் உதவியுடன் இந்த முயற்சியை எழில், பாக்கியா, செழியன் ஆகியோர் முறியடித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட கணேஷ், தற்போது சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தால் மிகுந்த பதற்றமடைந்த குடும்பத்தினர் அதற்கும் பாக்கியாவையே பழி சொன்னதையும் பார்க்க முடிந்தது. அவர்கள் பேச்சை கேட்காமல் உடல்நலம் குறைவாக இருந்த அமிர்தாவின் மாமனாரை பார்க்க அமிர்தா மற்றும் குழந்தையை பாக்கியா அழைத்து சென்றதையொட்டி அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
ரெஸ்டாரெண்ட் துவங்கும் பாக்கியா: இந்த பிரச்சினைகளில் இருந்தெல்லாம் தற்போது மீண்டுள்ள பாக்கியா, அடுத்ததாக தன்னுடைய ரெஸ்டாரெண்டை திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய நிறுவனம் கடன் தொல்லையால் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது பாக்கியாவின் வளர்ச்சியை கோபியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ராதிகாவிடம் பாக்கியாவை மட்டம் தட்டி பேசுகிறார். இதையடுத்து தன்னுடைய மகன்கள் எழில் மற்றும் செழியனிடமும் அதே முயற்சியை மேற்கொண்டு அவர்களிடம் திட்டு வாங்குகிறார் கோபி. இவைக் குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் பாக்கியா.
வெளிப்பட்ட கோபியின் குட்டு: இதனிடையே கடன் தொல்லையால் கோபி தன்னுடைய நிறுவனத்தை மூடியது குறித்து ராதிகாவிற்கு தெரியவருகிறது. தன்னுடைய அலுவலகத்தில் இருந்து கோபியின் நிறுவனத்தை பார்க்க சென்ற அவரை வழியில் மறித்து தன்னுடைய அலுவலகத்திற்கு செல்லவிடாமல் செய்கிறார் கோபி. இதனால் சந்தேகமடையும் ராதிகா, அவரது அலுவலகத்தை சென்று பார்க்கிறார். அப்போது அது சில வாரங்களுக்கு முன்பே மூடப்பட்டது அவருக்கு தெரியவருகிறது. இதனால் அவர் ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. ராதிகாவிற்கு பயந்து இந்த விவகாரத்தை மூடி மறைத்த கோபி, அடுத்தது என்ன செய்வார் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











