Baakiyalakshmi serial: செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ்.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி என்ன நடக்கும்!

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் பாக்கியா. அவருக்கு அமைச்சர் உள்ளிட்டவர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இருந்தபோதிலும் அவர் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி அவரது மகன்களின் பிரச்சினை ஆட்டிப் படைக்கிறது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய கேரியரையும் தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வரும் பாக்கியா கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியல் ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலின் தழுவலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.

Vijay TVs Baakiyalakshmi today (21st december 2023) episode

மாறிய பாக்கியாவின் வாழ்க்கை: தன்னுடைய கணவன் தன்னிடம் விவாகரத்திற்காக கையெழுத்து வாங்குவதுகூட தெரியாமல் அவருக்கு கையெழுத்து போட்டுக் கொடுக்கும் அப்பாவி பெண் கேரக்டரில்தான் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் பாக்கியா. ஆனால் தன்னுடைய 25 வருட தாம்பத்தியத்தில் தான் தன்னுடைய மனைவியுடன் சந்தோஷமாக இல்லை என்று கூறும் தன்னுடைய கணவனுக்கு தானே முன்வந்து விவாகரத்து கொடுக்கும் வகையில் அவரது வாழ்க்கை மாறுகிறது.

அடுத்தடுத்த பிசினஸ்: தொடர்ந்து தன்னுடைய கணவனை விவாகரத்து செய்யும் பாக்கியா, அவரது பெற்றோரையும் சேர்த்து அரவணைத்து செல்கிறார். தன்னுடைய மகன்கள் எழில், செழியன் மற்றும் மகள் இனியா என இருந்த பாக்கியாவின் வாழ்க்கையில் குடும்பத்தினர் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு விழுகிறது. தன்னுடைய முன்னாள் கணவன் கோபி, இத்தனை காலம் இதையெல்லாம் பார்த்துக் கொண்ட நிலையில் தற்போது இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய பிசினஸ்களை விரிவுபடுத்துவதாக காட்டப்பட்டது.

பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட்: ஆனால் அவற்றில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள், அடுத்தடுத்த பிசினஸ்களில் அவர் செலுத்தும் கவனம், அதற்கு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் நண்பர் பழனிச்சாசி கொடுக்கும் ஆதரவு, கோபி, ராதிகாவின் சூழ்ச்சிகள் என அனைத்தையும் சமாளித்து தறபோது பொருட்காட்சியில் கேன்டீன் கான்டிராக்ட் எடுத்து அசத்துகிறார். அமைச்சரே வந்து பாக்கியாவை நேரில் பாராட்டுவதாக காட்சிகள் அமைந்திருந்தன.

சிக்கலில் எழில் வாழ்க்கை: இந்நிலையில் இந்த சந்தோஷத்தை அவர் முழுமையாக அனுபவிக்காதபடி, தன்னுடைய மகன் எழில் வாழ்க்கையில் சூறாவளியாக வந்துள்ள அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்ல அவர் முற்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. அவர் விஷயத்தை கூறுவதற்கு முன்பாக, செழியனின் மனைவி ஜெனி, அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாக காட்டப்பட்டுள்ளது.

செழியனுக்கு விவாகரத்து நோட்டீஸ்: மாலினி விவகாரத்தால் ஜெனி செழியனை பிரிந்து சென்ற நிலையில் தற்போது அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து தன்னுடைய மனைவி மற்றும் மகளை நினைத்து செழியன் உடைந்து போகிறார். அவருக்கு எந்த விதத்தில் சமாதாளம் சொல்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவிக்கின்றனர். இந்த விவகாரம் தலைதூக்கியுள்ளதால் எழில் விவகாரத்தை வீட்டில் சொல்ல முடியாமலும் செழியனின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த விஷயத்தால் பாக்கியாவும் ஒருபுறம் பரிதவிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X