Sangamam episodes: அப்பாவின் தற்கொலை முயற்சி.. மனம் வெறுத்து தானும் தற்கொலைக்கு முயலும் ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் மகா சங்கமம் தற்போது நடந்து வருகிறது. பாண்டியன், கோமதி உள்ளிட்ட லீட் கேரக்டர்களில் ஸ்டாலின், நடிகை நிரோஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் அஜய் ரத்னம் உள்ளிட்ட நடிகர்களும் இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தன்னுடைய தங்கை காதலுக்காக வீட்டை விட்டு ஓடிப்போனதால் விரோதம் பாராட்டி வருகிறார் அவரது அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கிறார்.

ஆனால் அவருடைய தங்கையை போலவே மகள் ராஜியும் காதலித்து திருமணத்திற்கு முந்தைய தினம் வீட்டை விட்டு ஓடிப்போகிறார். இதனால் அவர்களது குடும்பமே இடிந்துப் போகிறது. ராஜியை தேடி பல இடங்களில் அலைந்து திரிகின்றனர். ஊராரின் முன்னிலையில் அவமானப்படும் முத்துவேல் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பரிதவிக்கின்றனர். இந்நிலையில் தன்னுடைய காதலனுடன் ஓடிப்போன ராஜியும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். தன்னுடைய குடும்பத்தை பிரிந்த துக்கம் அதிகரிக்க காதலன் கண்ணனிடம் தொடர்ந்து சண்டை பிடித்து வருகிறார்.

Vijay TVs Baakiylakshmi & Pandian stores 2 serial Sangamam episodes

விஜய் டிவியின் முன்னணி தொடர்கள்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் காணப்படுகின்றன. இந்த சீரியல்களின் சங்கமம் தற்போது நடந்து வருகிறது. தன்னுடைய அண்ணன் மகள் திருமணத்திற்கு தன்னை அழைக்காததால் மனம் வெறுத்து கோமதி தன்னுடைய மகன் கதிர் மற்றும் மருமகள் மீனாவுடன் திருச்செந்தூர் செல்கிறார். அங்கு அமைச்சரின் சிபாரிசில் கட்சி மாநாட்டிற்கு சமைப்பதற்காக வரும் பாக்கியலட்சுமி மற்றும் அவரது டீமிற்கும் கோமதி உள்ளிட்டவர்களுக்கும் அறிமுகம் ஏற்பட அது நட்பாக மாறுகிறது. சமையல் கான்டிராக்டை தொடர ஆட்கள் கிடைக்காமல் பாக்கியலட்சுமி திணற, அவருக்கு கைக்கொடுத்து சமையலில் உதவி செய்கிறார் கோமதி.

காதலனுடன் ஓடிப்போகும் ராஜி: இதனிடையே கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருமணத்திற்கு முந்தைய நாள் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அவருடைய காதலன் கண்ணன், தான் இறந்துவிடுவேன் என்று மிரட்டுவதால் இந்த முடிவை எடுக்கிறார். ஆனால் இந்த முடிவை நினைத்து வேதனையும் அழுகையுமாக இருக்கும் ராஜியை, கண்ணன் தொடர்ந்து திட்டுவது அவரை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. வீட்டை விட்டு வெளியேறும் அவர்கள், கோமதி, பாக்கியா தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே தங்குகின்றனர். முன்னதாக ராஜியின் நகைகளை கண்ணன், அவருக்கு தெரியாமல் எடுத்து வருகிறார்

தற்கொலைக்கு முயலும் முத்துவேல்: ராஜி ஓடிப்போனதால் திருமணம் நிற்கிறது. இதனால் ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறார் முத்துவேல். அவமானத்திற்கு உள்ளாகும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றுகின்றனர். ராஜி தன்னைப்போலவே வீட்டைவிட்டு ஓடிப் போனதை கேள்விப்பட்டு மனமுடையும் கோமதி, தன்னுடைய அண்ணனின் தற்கொலை முயற்சியாலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதனிடையே இந்தத் தொடரின் அடுத்த வார எபிசோட்களுக்கான பிரமோ வெளியாகியுள்ளது. முன்னதாக ராஜியையும் கண்ணனையும் ஹோட்டலில் பார்த்துள்ள பாக்கியா, தற்போது கோமதியின் மொபைலில் ராஜியின் புகைப்படத்தை பார்த்து அடையாளம் காட்டுகிறார்.

ராஜியை கண்டுபிடிக்கும் கோமதி: தொடர்ந்து ராஜி இருக்கும் ரூமை காட்டுகிறார் பாக்கியா. இதையடுத்து ராஜியை கண்டுபிடிக்கும் கோமதி உள்ளிட்டவர்கள் அவரை கண்டிக்கின்றனர். கோமதி ராஜியை அடித்து, தன்னைப் போலவே அவரும் செய்ததை சுட்டிக் காட்டுகிறார். இதனால் தன்னுடைய அண்ணன் தற்கொலைக்கு முயற்சித்ததையும் கூறுகிறார். இதனால் மனமுடையும் ராஜி, தன்னுடைய அப்பா மற்றும் குடும்பத்தினரின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்பதை உணர்ந்து அவரும் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X