Baakiyalakshmi: என்ன முடிவெடுத்தாலும் ஜெனிகூட தான் நிற்பேன்.. உறுதியாக நின்ற பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.
கோபி, பாக்கியா, ராதிகா என குறைவான லீட் கேரக்டர்களையும் அவர்களது நெருங்கிய உறவுகளை மட்டுமே கேரக்டர்களாக இந்த தொடரில் பார்க்க முடிகிறது. பெங்காலியில் பெரும் வெற்றி பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக இருந்த போதிலும் இந்தத் தொடர் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமான வகையில் கவர்ந்து வருகிறது. பெங்காலியில் பெரும் வெற்றி பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ் ரசிகர்களை கவரும்வகையில் இந்த தொடரில் மாற்றங்கள் செய்யப்பட்டு அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பரபரப்பான எபிசோட்கள்: கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே இந்த தொடர் கேரக்டர்களாக கொண்டு அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த தொடரில் கோபி -பாக்கியா விவாகரத்தான சூழலில் தன்னுடைய குடும்பத்தினரை மட்டுமில்லாமல் தன்னுடைய மாமனார் -மாமனாரையும் தன்னுடைய குடும்பத்தினராகவே பாவிக்கிறார் பாக்கியா. அந்த வகையில் அவர்களை காக்கும்வகையில் தன்னுடைய கேரியரையும் பெஸ்டாக மாற்றுகிறார்.
மாலினி மூலம் தெரியவந்த உண்மை: இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து கோபி மற்றும் ராதிகா ஆகியோர் பிரச்சினைகளை உண்டு செய்துவரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கையை மட்டுமில்லாமல் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ள தன்னுடைய மகன்களின் வாழ்க்கையையும் மீட்க போராடி வருகிறார் பாக்கியா. செழியன் -மாலினி விவகாரம் குறித்து தெரியவந்த நிலையில், அதிலிருந்து செழியனை மீட்க போராடிய அவரது முயற்சி தோற்கிறது. தற்போது வீட்டினருக்கு மாலினி மூலம் உண்மை தெரியவந்துள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி: இதையடுத்து குழந்தையுடன் வீட்டை விட்டு செழியனின் மனைவி ஜெனி வெளியேறுகிறார். இதனால் பரிதவிக்கும் செழியன் தான் செய்த தவறுகளை உணர்கிறார். ஆனாலும் காலம்கடந்த அவரது சிந்தனையால் பிரச்சினை தீராமல் சிக்கலில் உள்ளது. ஜெனியை அவரது வீட்டில் சந்தித்து மன்னிப்பு கேட்க செழியன் செல்கிறார். ஆனால் அவரை வீட்டிற்குள்ளேயே விடாமல் ஜெனியின் அம்மா பிரச்சினை செய்கிறார்.
ஜெனி கேட்ட கேள்வி: மேலும் ஈஸ்வரியின் தூண்டுதலால் ஜெனி வீட்டிற்கு சமாதானம் பேச செல்கிறார் பாக்கியா. ஆனால் அங்கு ஜெனி கேட்கும் கேள்விகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதே சூழ்நிலையில் பாக்கியா, கோபியை பிரிந்ததை எடுத்துக்கூறும் ஜெனி, அந்த நேரத்தில் பாக்கியாவிற்கு துணையாக தான் இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார். மேலும் தன்னுடைய மகள் இனியாவின் வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் பாக்கியா யார் பக்கம் இருப்பார் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
ஜெனிக்கு ஆதரவாக பேசிய பாக்கியா: இந்த கேள்விகளால் அதிர்ச்சிக்குள்ளாகும் பாக்கியா அடுத்ததாக எந்த கேள்வியும் கேட்காமல் ஈஸ்வரியுடன் அங்கிருந்து திரும்புகிறார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் ஈஸ்வரி, தொடர்ந்து பாக்கியாவை குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து ஆத்திரமடையும் பாக்கியா, ஜெனி கேட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார். தான் எப்போதும் ஜெனிக்குதான் ஆதரவாக இருப்பேன் என்றும் அழுத்தமாக பதிவு செய்கிறார். மேலும் செய்த தவறுக்கு செழியன் அனுபவிப்பதுதான் சரி என்றும் குடும்பத்தினருக்கு தெளிவு படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











