BB tamil 7: டீ போடறதுக்கு இவ்வளவு அலப்பறையா.. என்னங்க பாஸ் உங்க சட்டம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றுவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. போட்டி 18 போட்டியாளர்களுடன் சிறப்பாக துவங்கியது.
தற்போது இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது. இன்றைய தினம் 36வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 36வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. நித்தம் ஒரு டாஸ்க்குடன் போட்டியாளர்களின் பல்வேறு விதமான சண்டைகள், சச்சரவுகள், சவால்கள் என இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிரதீப்பிற்கு ரெட் கார்ட்: நிகழ்ச்சியில் பல்வேறு விதமான விவாதங்கள் உள்ளிட்டவையும் ரசிகர்களை கவரும் வகையில் நடந்து முடிந்துள்ளது. விசித்ரா -ஜோவிகா இடையிலான கல்வி குறித்த விவாதமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மெண்டை கொடுத்ததுடன் யோசிக்கவும் வைத்தது. தொடர்ந்து விஜய் வர்மா -பிரதீப் இடையிலான சண்டை, சச்சரவுகளும் கவனத்தை பெற்றன. இந்நிலையில் தற்போது பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து ஆங்கர் கமல்ஹாசன் எலிமினேட் செய்துள்ளார்.
சர்ச்சைகளை ஏற்படுத்திய எலிமினேஷன்: இந்த எலிமினேஷன் பல்வேறு விதமான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கமலின் இந்த செயல் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல் பேசலாமா என்பது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சியின் 36வது நாளான இன்று அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் டீ போடுவதற்கு போட்டியாளர்கள் அடித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது.
இன்றைய ப்ரமோக்கள்: விசித்ராவை டீ போடச் சொல்லி மாயா அதிரடியாக கூறிய நிலையில், கேப்டன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா, அப்படி எந்த சட்டமும் இல்லை என்று தினேஷ் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்புவதாகவும் இந்த ப்ரமோவில் காணப்படுகிறது. அவர் சம்பந்தமே இல்லாமல் பேசுவதாக ஐஸ்வர்யா குற்றம் சாட்டுகிறார். இவர்கள் அனைவரும் இப்படி போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், விஷ்ணு கூலாக இந்த நிகழ்வை கமெண்ட் செய்வதாகவும் காணப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல்: இந்த நிகழ்ச்சியில் பிரதீப் எலிமினேஷனில் கமல்ஹாசன் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக கமெண்ட்ஸ் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கூலாக எதிர்கொண்ட நடிகர் சிம்புவை நிகழ்ச்சியின் ஆங்கராக கொண்டுவர வேண்டும என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல்ஹாசன் பேசுவதா என்றும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











