Bharathi kannamma 2: நிறைவடைந்தது பாரதி கண்ணம்மா 2 தொடர்.. ரியாலிட்டி ஷோவிற்கு தாவிய வில்லி!

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா 2 தொடர் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

நேற்றைய தினம் 3 மணிநேரத்திற்கும் மேல் இந்த சீரியலின் எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டன. பரபரப்பான காட்சிகளுடன் தொடர் எண்ட் கார்ட் போட்டுள்ளது.

Vijay TVs Bharathi kannamma 2 serial ends with 1175 episodes

வெண்பா மற்றும் பாரதிக்கு இடையில் நடக்கவிருந்து திருமணத்தை நிறுத்தி, தான் குற்றமற்றவள் என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார் கண்ணம்மா.

1175 எபிசோட்களுடன் நிறைவடைந்த பாரதி கண்ணம்மா 2 தொடர்: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களின் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா 2, கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கியது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் சீசன் நிறைவடைந்த நிலையில், சில தினங்களிலேயே, தொடரின் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது. கிராமத்து கதைக்களத்தில் பாரதியாக சிபு சூரியன் இந்தத் தொடரில் களமிறங்கினார். கண்ணம்மாவாக வினுஷாவே நடித்த நிலையில், சிறப்பான எபிசோட்களை கொடுத்தது சீரியல்.

ஆனாலும் தொடர் எதிர்பார்த்த டிஆர்பியை கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனிடையே 1175 எபிசோட்களுடன் நேற்றைய தினம் இந்தத் தொடர் நிறைவடைந்துள்ளது. இதுவரை இல்லாதவகையில் ஞாயிற்றுக்கிழமை, தொடர்ந்து மூன்று மணிநேரத்திற்கு மேல் இந்தத் தொடரின் இறுதி எபிசோட் ஒளிபரப்பானது. சிறுவயதில் கண்ணம்மா மீது விழுந்த கொலைப்பழிக்காக அவர் சிறை தண்டனை அனுபவித்த நிலையில், பாரதியின் அப்பாவைத்தான் கண்ணம்மா கொலை செய்ததாக தெரியவருகிறது.

https://www.instagram.com/p/CvmrSgSxEna/

தொடர்ந்து வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணத்தை நிச்சயிக்கிறார் சவுந்தர்யா. ஒருபக்கம், தன்மீதான பழியை துடைப்பதற்காக கண்ணம்மா, சென்னைக்கு சென்று நாகராஜ் என்பவரை தேடுகிறார். அவருடன் மது மற்றும் கண்ணம்மாவின் மாமா இருவரும் செல்ல, வீதி வீதியாக இவர்கள் தேடுகின்றனர். இந்நிலையில் நாகராஜை தேடி கண்டுபிடித்து வரும் வழியில், வெண்பா உள்ளிட்டவர்கள் செட் செய்த, வில்லியும் கண்ணம்மாவை தீர்த்துக்கட்ட முயல்கிறார்.

ஒருவழியாக இந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி, கோயிலில் வெண்பா -பாரதி திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார் கண்ணம்மா. தொடர்ந்து பாரதியுடன் இணைவதாக தொடர் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பாரதியின் அப்பா வேணுகோபாலை கொலை செய்த வெண்பாவின் அப்பா மற்றும் கண்ணம்மாவை தீர்த்துக்கட்ட ஆள் செட் செய்த வெண்பா, அவரது அம்மா மற்றும் அண்ணன் கைது செய்யப்படுகின்றனர்.

Vijay TVs Bharathi kannamma 2 serial ends with 1175 episodes

தன்னை தவறாக தொட வந்ததாக பாரதியின் அப்பா வேணுகோபால் மீது கண்ணம்மா வைத்திருந்த தவறான நினைப்பும் சரியாகிறது. இந்த உண்மைகள் அனைத்தும் தெரியவந்தவுடன் சவுந்தர்யாவும் தன்னுடைய தவறை உணர்ந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அவசர கதியில் நிறைவு செய்யப்பட்ட இந்தத் தொடரில் பல லாஜிக் மீறல்கள் இருந்தபோதிலும் ஒருவழியாக இந்தத் தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தத் தொடரில் வில்லியாக நடித்துவந்த பரீனா தற்போது ஆங்கராக வேறு சேனலுக்கு மாறியுள்ளார். ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சியான டக்கர் டக்கர் நிகழ்ச்சியில் அவர் ஆர்ஜே விஜய்யுடன் இணைந்து ஆங்கராக செயல்பட உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை விரைவில் சேனல் வெளியிடவுள்ளது. தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 1 மற்றும் 2ல் வில்லியாக மிரட்டிய பரீனா, ஆங்கராக மாறவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X