Bharathi kannamma 2: எண்ட் கார்ட் போடும் பாரதி கண்ணம்மா 2.. 3 மணிநேரம் ஒளிபரப்பாகும் இறுதி எபிசோட்!
சென்னை: விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா 2 கடந்த பிப்ரவரியில்தான் தன்னுடைய பயணத்தை துவங்கியது.
ஆனால் சில மாதங்களிலேயே இந்தத் தொடர் தற்போது நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி அத்தியாயம் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் கடந்த சில எபிசோட்களுக்கு முன்புதான் பாரதியை, கண்ணம்மா திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணத்தை சவுந்தர்யா ஏற்காமல் அவர்களை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் பாரதி கண்ணம்மா 2 தொடர்: விஜய் டிவியின் முக்கியமான தொடராக கடந்த சில வாரங்களில் மாறியுள்ளது பாரதி கண்ணம்மா 2. இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்தது. உடனடியாக சில தினங்களிலேயே தொடரின் இரண்டாவது சீசன் துவங்கிய நிலையில், முதல் பாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில், அடுத்தடுத்த எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு வழங்கி வந்தது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளது.
கடந்த சில எபிசோட்களுக்கு முன்புதான், கண்ணம்மாவை திருமணம் செய்துக் கொண்டார் பாரதி. தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி இந்த திருமணத்தை பாரதி செய்துக் கொண்ட நிலையில், அவர்களை வீட்டை விட்டு துரத்தினார் பாரதியின் அம்மா சவுந்தர்யா. இந்நிலையில், இவர்களை அவரே வீட்டிற்குள் அழைக்கும் சூழ்நிலையை வில்லி வெண்பாவின் அண்ணன் விஜய் ஏற்படுத்தினார். அவர் எதையோ நினைத்து செய்யப்போக அது பாரதிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பாரதியின் அப்பாவை பார்க்கும் கண்ணம்மா அதிர்ச்சிக்குள்ளாகிறார். தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து, தான் ஜெயிலுக்கு செல்ல காரணமான வேணுகோபால்தான் பாரதியின் அப்பா என்பதை தெரிந்து அவர் மிகுந்த அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், தன்னுடைய தந்தையை கொன்றது கண்ணம்மாதான் என்பது பாரதிக்கு தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சியடைகிறார் பாரதி.
இதையடுத்து, இது உண்மையா என கண்ணம்மாவிடம் பாரதி தெளிவுப்படுத்திக் கொள்கிறார். தொடர்ந்து கண்ணம்மாவை வீட்டை விட்டே துரத்துகிறார். இதனால் உடைந்துப் போனாலும், மூன்றே நாட்களில் தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பதாக கண்ணம்மா சபதம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதாக தற்போதைய ப்ரமோ வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த தொடர் நிறைவடையவுள்ள நிலையில், முதல் பாகத்தை போல இல்லாமல், இந்த சீசன் மிகவும் பரபரப்பான எபிசோட்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் இந்தத் தொடர் நிறைவடையவுள்ளதாக தற்போது விஜய் டிவி தெரிவித்துள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் முதல் முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு துவங்கும் இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் 6.30 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளதாகவும் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்தத் தொடரின் இறுதி அத்தியாயத்தை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தத் தொடர் நிறைவடையவுள்ள குறித்து வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











