Bharathi kannamma 2: பாரதி கண்ணம்மா வெற்றி விழா.. கண்ணம்மாவை கண்கலங்க வைத்த உறவுகள்!

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் பேவரிட் சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா 2 கடந்த வாரத்தில் நிறைவடைந்தது.

இந்தத் தொடருக்கு அதிகமான டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததே தொடரின் நிறைவுக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின.

Vijay TVs Bharathi Kannamma 2 success event will be telecast on Sunday

இந்நிலையில் இந்தத் தொடரின் வெற்றி விழாவை சேனல் தற்போது நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சக்சஸ் விழா: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் முதல் பாகம் கடந்த பிப்ரவரியில்தான் நிறைவடைந்தது. தொடர்ந்து சில தினங்களிலேயே இரண்டாவது பாகமும் துவங்கப்பட்டது. முதல் பாகத்தை போல இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்துடன் புதிய ஹீரோவாக சிபு சூர்யனை களமிறக்கி இந்தத் தொடர் துவங்கப்பட்டது. நாயகியாக வினுஷாவே நடித்திருந்தார்.

முதல் சீசனில் இடம்பெற்ற சில நடிகர்கள் இந்தத் தொடரிலும் இடம்பெற்றிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோட்களை இந்தத் தொடர் ஒளிபரப்பிய நிலையில், தொடருக்கு போதுமான டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்தத் தொடர் கடந்த வாரத்தில் நிறைடைந்தது.

Vijay TVs Bharathi Kannamma 2 success event will be telecast on Sunday

விஜய் டிவியில் இதுவரை இல்லாதவகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தொடரின் இறுதி எபிசோட் தொடர்ந்து 3 மணிநேரத்திற்கும் மேல் ஒளிபரப்பானது. தான் சிறை சென்றதற்கு பாரதியின் அப்பா தான் காரணம் என்று கண்ணம்மா நினைத்திருந்த நிலையில், அவரது மாமாதான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம் என்பதை கண்டுபிடித்து, வெண்பா மற்றும் அவரது குடும்பத்தினரின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி அவர்களை சிறைக்கு அனுப்பினார் கண்ணம்மா.

இந்த நிறைவு ஏற்கனவே யூகிக்கப்பட்டாலும் தொடர்ந்து ஒளிபரப்பான இந்த எபிசோட்கள் சிறப்பாகவே அமைந்தன. இறுதியில் பாரதியும் கண்ணம்மாவும் இணைய, சவுந்தர்யா, கண்ணம்மாவை உச்சி முகர, சுபம். இந்நிலையில் இந்தத் தொடரின் வெற்றி விழா கொண்டாட்டத்தை விஜய் டிவி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பவுள்ளது. இதுகுறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

Vijay TVs Bharathi Kannamma 2 success event will be telecast on Sunday

நிகழ்ச்சியில் வினுஷாவின் குடும்பத்தினரும் மேடையில் ஏறி அவர்குறித்த பாராட்டுக்களை பகிர்ந்துக் கொண்டனர். மேலும் தங்களை மிகவும் சிறப்பாக அவர் பார்த்துக் கொள்வதாக அவரது அம்மா கூறுகிறார். இதையடுத்து நெகிழ்ச்சியடைந்த வினுஷா, தன்னுடைய அம்மா ரியல் லைஃப் கண்ணம்மா என்று கூறுவதாக இந்த ப்ரமோவில் காணப்படுகிறது. இந்த வெற்றிவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X