BB7 show: மணிக்கு கோல்ட் ஸ்டாரை கொடுத்த டீம்.. கடுப்பை வெளிப்படுத்திய மாயா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது.
18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் இன்றைய தினம் 46வது நாளில் என்ட்ரியாகியுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே ஆங்கரிங் செய்து வருகிறார்.
46வது நாளில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்றைய தினம் 46வது நாளில் களமிறங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் களமிறங்கியுள்ளனர். இதனிடையே நித்தம் ஒரு டாஸ்க், பிரச்சினைகள், சவால்கள், குழப்பங்கள், விமர்சனங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. நிகழ்ச்சியில் ஜோவிகா மற்றும் விசித்ரா இடையிலான கல்வி குறித்த விவாதத்தில் துவங்கி சமீபத்தில் பிரதீப் எலிமினேஷன் வரை நிகழ்ச்சியில் அடுத்தடுத்த நிகழ்வுகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இந்த நிகழ்ச்சியில் மாயா -பூர்ணிமா ரவி இடையிலான நட்பும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் அதிகமான சர்ச்சைகளை மாயா மற்றும் அவர்களது நண்பர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இவர்களது அடுத்தடுத்த அலப்பறைகள் மற்றும் அதன் விளைவுகள் அதிகமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் 46வது நாளின் அடுத்தடுத்தப் பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
ப்ராவோ மீது கோபப்பட்ட மாயா: இன்று வெளியான முதல் ப்ரமோவில் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறியிருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் இவர்கள் இந்த வீட்டில் என்ன செய்தார்கள் என்பதாக வாக்குவாதங்கள் நடந்ததையும் பார்க்க முடிந்தது. பெண்களின் சண்டை பேஸ்லஸ்ஸாக இருக்கும் என்று பிராவோ கூற, கோபத்தில் மாயா பொங்கியதையும் அவரிடம் சென்று சண்டை போட்டத்தையும் பார்க்க முடிந்தது. கண்டென்ட் செய்வதாகக் கூறி மற்றவர்கள் செய்ததையும் தினேஷ் சுட்டிக் காட்டினார்.
கடுப்பான மாயா: இதனிடையே தற்போது நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் ப்ரமோவில் தினேஷ் உள்ளிட்டவர்கள் இணைந்து திட்டமிட்டு மணிசந்திராவிற்கு கோல்ட் ஸ்டாரை கொடுக்கின்றனர். இதையடுத்து மணியை எதற்காக காப்பாற்ற கோல்ட் ஸ்டாரை கொடுக்க வேண்டும் என்று மாயா கேள்வி எழுப்புகிறார். தனக்கு இதன்மூலம் ஏற்பட்ட கடுப்பையும் அவர் வெளிப்படுத்துகிறார். நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஸ்கோர் குறித்தும் காட்டப்படுகிறது.
ரசிகர்கள் கமெண்ட்: இந்த கோல்ட் ஸ்டாரை நல்ல ப்ளேயர் சரவணனுக்கு கொடுத்திருக்கலாம் என்று மாயா கூறுவதையும் ப்ரமோவில் பார்க்க முடிகிறது. இதனிடையே இந்த ப்ரமோவிற்கு ரசிகர்கள் ஏராளமானோர் கமெண்ட் செய்துள்ளனர். போட்டியாளரை காப்பாற்றுவதற்காக கோல்ட் ஸ்டாரை கொடுத்தது மாயாவிற்கு பிரச்சினை இல்லை என்றும் மணிசந்திராவிற்கு கொடுத்ததுதான் பிரச்சினை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











