Bigg boss tamil 7: விசித்ராவை அழவைத்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.. அர்ச்சனா கேட்ட கேள்வி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 65வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் எதிர்கொண்டு நடத்தி வருகின்றனர். இதன்மூலம் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கப்பட்டு தற்போது நிகழ்ச்சி 65வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் பலமாகவும் உள்ளது.
65வது நாளில் என்ட்ரி: கடந்த 65 நாட்களாக சிறப்பாக தொடர்ந்து வருகிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலிருந்தே அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாகவும் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் இவ்வாறு நுழைந்த தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்கு முக்கிய பங்களித்து வருகின்றனர்.
வித்தியாசமான டாஸ்க்குகள்: போட்டியில் சிறப்பான பங்களிப்பை போட்டியாளர்கள் கொடுத்து வருகின்றனர். அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளிலும் விவாதங்களிலும் பிரச்சினைகளிலும் இவர்களை பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை குறையாமல் போட்டியாளர்கள் பார்த்து வருகின்றனர். இதனிடையே நிகழ்ச்சியின் 65வது நாளான இன்றும் வித்தியாசமான டாஸ்க்குடன் ஹவுஸ்மேட்ஸ் களமிறங்கினர்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இன்று வெளியான முதல் பிரமோவில் பொம்மலாட்டம் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பிக்பாஸ் வீடு கிட்ஸ் சோனாக மாறியது. ஹவுஸ் மேட்சில் சிலர் குழந்தைகளாகவும் சிலர் பொம்மைகளாகவும் தங்களை பிரதிபலித்தனர். தொடர்ந்து போட்டியாளர்கள் வித்தியாசமான வகையில் நடந்துக் கொண்டதையும இந்த பிரமோவின்மூலம் பார்க்க முடிந்தது. தொடர்ந்து தற்போது வெளியான 2வது பிரமோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விசித்ராவை அழவைத்த ஹவுஸ்மேட்ஸ்: இரண்டாவது பிரமோவில் ஒருவரிடம் பொம்மையாக சிக்கி விட்டால் எதுவேண்டுமானாலும் செய்யலாமா என்று அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, ஒருவரை அசிங்கப்படுத்துவதா இந்த டாஸ்க் என்று கேட்பதாகவும் பிரமோ அமைந்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக முட்டிக் கொண்டிருந்த மாயா மற்றும் அர்ச்சனா இருவரும் மீண்டும் கூடி பேசினர். அவர்கள் விஷ்ணு குறித்து பேசியதாக தெரிகிறது.
அர்ச்சனா கேள்வி: தொடர்ந்து பேசும் அர்ச்சனா, தான் அவர்களை அதிகமாக ஹர்ட் செய்ததாக கூறுகிறார். இதையடுத்து நடிகை விசித்ரா, நான் வெளியேறவேண்டும் என்று கண்கலங்கிக் கொண்டே கூறுவதாகவும் இந்த பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் விசித்ராதான் எலினேட் ஆவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இவர் தான் வெளியேறவேண்டும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வருத்தப்பட செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











