BB 7 show: மாயா பாஸ் ஹவுஸ்ன்னு பேரை மாத்தி வைச்சிருக்கனும்.. பொங்கிய அர்ச்சனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினம் 37வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், வைல்ட் கார்ட் மூலம் 5 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்கள் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் இல்லங்கள் தனித்தனியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

Vijay TVs Bigg boss 7 show entered 37th day and the promos released


பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. போட்டியில் 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில் முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகள் பெற்று அனன்யா வெளியேறியதை பார்க்க முடிந்தது.

அடுத்தடுத்து வெளியேறிய போட்டியாளர்கள்: கடந்த சீசன்களில் முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என்ற நடைமுறையையும் இந்த சீசன் தகர்த்தது. தொடர்ந்து வழக்கமாக இல்லாமல் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, பிரதீப், அன்னபாரதி என 6 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். பவா செல்லதுரை தானே விரும்பி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

சர்ச்சைகளை ஏற்படுத்திய எலிமினேஷன்: இதனிடையே கடந்த வாரத்தில் பிரதீப்பின் எலிமினேஷன் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் மட்டுமின்றி வெளியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் செய்தது சரியா என்ற கேள்விகளை பல்வேறு தரப்பினரும் கேட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 37வது நாளில் களமிறங்கிய நிலையில், துவக்கம் முதலே பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது.

போட்டியாளர்களிடம் அதிரடி காட்டும் மாயா: அதேபோல தற்போதும் பிரச்சினைகள் வெடித்துள்ளன. கேப்டன் என்றால் எதை சொன்னாலும் கேட்க வேண்டுமா என்று நேற்றைய தினம் தினேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். விசித்ராவை டீ போடச் சொல்லி அதிகாரம் செய்தார் கேப்டன் மாயா. தொடர்ந்து அவரது அட்ராசிட்டி நடவடிக்கைகளை கேள்வி எழுப்பி வருகின்றனர் ஸ்மால் பாஸ் வீட்டினர். அவர் இருக்கும் பிக்பாஸ் ஹவுசை, மாயா பாஸ் ஹவுஸ் என்று வைத்திருக்க வேண்டும் என்று விஜே அர்ச்சனா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

மாயா குறித்து அர்ச்சனா கோபம்: இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியான நிலையில், இரண்டாவது ப்ரமோவில் அர்ச்சனா, விசித்ராவிடம் இப்படி பொங்கியதை பார்க்க முடிந்தது. மாயா டைட்டில் வின்னராகவே ஆனாலும், இத்தனை பேரை எமோஷனலாக காலி செய்தது குறித்து அவருக்கும் வருத்தம் ஏற்படாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கேப்டனானவுடன் இப்படி நடப்பார் என்று தான் நினைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

அர்ச்சனாவுடன் விசித்ராவும் ஆத்திரம்: தன்னை சீப் கேரக்டராக வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இவருக்கும் ரெட் கார்ட் வாங்கிப் போனவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அர்ச்சனா கூற, இவருக்காக எல்லாம் பயந்து ஆடிக் கொண்டிருக்க முடியாது என்று விசித்ராவும் கோபத்தை வெளிப்படுத்துவதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து இரு வீட்டாரிடையே வலுத்துவரும் பனிப்போர் எவ்வாறு தொடரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X