Bigg boss 7 show: பந்தை வைத்து வித்தியாசமான டாஸ்க்.. என்னமா படுத்தி எடுக்குறாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் என்ட்ரி ஆகியுள்ளது.

இன்றைய தினம் 53வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன.

Vijay TVs Bigg boss 7 show entered today 53rd day and the next to next promos released

அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளாலும் நிகழ்வுகளாலும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது 7வது சீசனின் 53வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர். இவர்களுக்கு சிறப்பான அறிமுகத்தை ஆங்கர் கமல்ஹாசன் கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியை 7வது முறையாக அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்: இந்தப் போட்டியிலிருந்து தற்போது 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் நுழைந்தனர். சின்னத்திரை பிரபலங்கள் தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டவர்கள் போட்டியில் நுழைந்த நிலையில் போட்டி நித்தம் ஒரு டாஸ்க் என களைகட்டி வருகிறது. முன்னதாக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் இந்த நிகழ்ச்சி மேலும் ரசிகர்களை கவர காரணமாக அமைந்தார்.

சர்ச்சைகளை ஏற்படுத்திய பிரதீப் எவிக்ஷன்: அவரது எவிக்ஷன் சரியானதா என்று விமர்சிக்கப்பட்டது. கமல்ஹாசன் மீதும் ஏராளமானோர் குற்றம் சாட்டி வந்தனர். பிரதீப் மீண்டும் நிகழ்ச்சியில் இணைவாரா என்றும் பேசப்பட்டது. தான் தயார் என்றும் சிறப்பான கேமை தான் தொடர்வேன் என்றும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தற்போது இந்த நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்ட் போட்டியாளராக இணையவில்லை. மாறாக கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்: இந்நிலையில் அடுத்ததாக போட்டியில் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் இணையவுள்ளதாகவும் அவர்களுக்கு மாற்றாக தற்போது நிகழ்ச்சியில் உள்ள 3 போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான டாஸ்க்குகள் வைக்கப்பட்டு அதில் தோற்கும் நபர் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களுக்கு வழிவிட்டு விலகவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த வித்தியாசமான டாஸ்க்குகளை போட்டியாளர்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.

53வது நாளில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: அந்த வகையில் இன்றைய தினம் போட்டி 53வது நாளையெட்டியுள்ளது. இதையொட்டி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பந்தை வைத்து வித்தியாசமான டாஸ்க்கை போட்டியாளர்கள் மேற்கொண்டனர். இந்த டாஸ்க்கில் தோற்றால் ஹவுஸ்மேட்ஸ் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அடுத்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யலாம் என்றும் இந்தப் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X