BB7 show: போட்டியாளர்களுக்கு பாவைக்காய் அல்வா கொடுத்த கமல்ஹாசன்.. களைகட்டிய ப்ரமோ!
BB7 show: போட்டியாளர்களுக்கு பாவைக்காய் அல்வா கொடுத்த கமல்ஹாசன்.. களைகட்டிய ப்ரமோ!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 7வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளது. கடந்த 6 சீசன்களை ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை துவக்கம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 35வது நாளை எட்டியுள்ளது. இந்த நாட்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் வெற்றிகரமான எபிசோட்களை கொடுத்து வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் 6 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். 5 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் பவா செல்லதுரை நிகழ்ச்சியிலிருந்து தானே விரும்பி வெளியேறினார்.
வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடைய கடந்த வாரத்தில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இவர்கள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் மல்லுகட்டும் சூழல் ஏற்பட்டது. நித்தம் ஒரு வித்தியாசமான டாஸ்க்குடன் இந்தப் போட்டி களைகட்டிவரும் நிலையில் நேற்றைய தினம் போட்டியாளர் ப்ரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
எலிமினேட் ஆன ப்ரதீப்: முன்னதாக சக போட்டியாளர்களிடம் அவரது எலிமினேஷன் குறித்து கமல்ஹாசன் கருத்து கேட்ட நிலையில், அதிகமான போட்டியாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தனர். அவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக போட்டியாளர்கள் தெரிவித்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் பெண்கள் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறி, பிரதீப்பை எலிமினேட் செய்தார் கமல்ஹாசன். இதனிடையே பிரதீப்பிற்கு ஆதரவாக வெளியில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாவைக்காய் அல்வா: இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 35வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினம் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பாவைக்காய் அல்வாவை காட்சிப்படுத்திய கமல்ஹாசன், அதற்கு தகுதியானவர்கள் யார் என போட்டியாளர்களிடம் கேட்க அர்ச்சனா, பூர்ணிமாவை கைக்காட்டினார். தன்னை முதல் நாளிலேயே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அவர் அனுப்பியதை காரணம் காட்டினார்.
மாயாவிற்கு பாவைக்காய் அல்வா: தொடர்ந்து மாயாவிற்கும் பாவைக்காய் அல்வா கொடுக்கப்பட்டது. அர்ச்சனாவும் பாவைக்காய் அல்வாவை சாப்பிடுவதாக தற்போதைய ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அர்ச்சனாவிடம் அவரை இந்த நிகழ்ச்சியில் எப்படி ட்ரீட் செய்வார்கள் என்று எதிர்பார்த்து வந்தீர்கள் என்று கமல் கேள்வி கேட்க, எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த அவர் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்றும் கமல் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











