BB tamil 7: என்னை கேனைன்னு நினைச்சீங்களா.. பொங்கிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 32வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மமாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர்.

Vijay TVs Bigg boss 7 show enters 32nd day and promos released

18 போட்டியாளர்களில் 5 பேர் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை அதிரடியாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய் டிவி, கடந்த 1ம் தேதி முதல் 7வது சீசனை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் கடந்த வாரத்தில் போட்டியில் நுழைந்துள்ளனர்.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்: முதல் வாரத்திலிருந்தே ரசிகர்களை கவரும்வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நடைபெற்று வரும்நிலையில், அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சி 32வது நாளில் களமிறங்கியுள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.காலையில் வெளியான முதல் ப்ரமோவில் இந்த நாளைக்காக சிறப்பான டாஸ்க் நடத்தப்பட்டன.

32வது நாளில் பிக்பாஸ் 7 ஷோ: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் விசித்ரா சக போட்டியாளர்களிடம் ஆத்திரப்பட்ட சம்பவத்தை பார்க்க முடிந்தது. தன்னை எதற்காக ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்று அவர் கோபத்துடன் கேட்டார். தொடர்ந்து ரூல்சை ப்ரேக் செய்தால் கரண்ட் கட்டாகும் என்று ஜோவிகா அவரை எச்சரிப்பதையும் ஆகட்டும் என்று விசித்ரா கூறுவதையும் பார்க்க முடிந்தது. வாய்க்கு வந்தபடி பேசுவதை கேட்க தன்னை என்ன கேனை என்று நினைத்துவிட்டீர்களா என்றும் அவர் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

விசித்ரா ஆத்திரம்: தான் சமைக்க மாட்டேன் என்றும் யாருக்கும் சோறு கிடையாது என்றும் அவர் கூறியதையும் ப்ரமோவில் பார்க்க முடிந்தது. தன்னை வைத்து செய்வதாகவும் அந்த அளவிற்கு கருமாந்திரமான மெச்சூரிட்டி இல்லாத டீமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஜோவிகா உள்ளிட்டவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்த விசித்ராவையே தற்போது போட்டியாளர்கள் வெறுப்பேற்றியுள்ளதையும் அவர் பொங்கியதையும் பார்க்க முடிந்தது.

தொடரும் போட்டியாளர் எண்ணிக்கை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது ஒரு மாதத்தை கடந்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே அனன்யா குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆன நிலையில், பவா செல்லதுரையும் நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லாமல் வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா என அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் எண்ணிக்கை 18ஆகவே தொடர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X