BB7 show: லட்டில் வைக்கப்பட்ட ட்விஸ்ட்.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் அதிக லட்டு வாங்கிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 44வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Vijay TVs Bigg boss 7 show todays promos released

இன்றைய தினம் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கி இன்றைய தினம் 44வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக 6 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 7வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

கேப்டன் தினேஷ்: இந்த வாரத்தின் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் வாரத்திலிருந்தே பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என போட்டியாளர்கள் இருவேறு குழுக்களாக தனித்தனி வீடுகளில் வசித்துவந்த நிலையில், அவர்களுக்குள் அதிகமான போட்டி, பொறாமை, சண்டை, வாக்குவாதங்களை பார்க்க முடிந்தது. வேலை செய்ய மாட்டோம் என ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் மல்லுகட்டியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த வாரம் இந்த பிரிவினைகள் இல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்: அடுத்தடுத்த டாஸ்க்குகளால் போட்டியாளர்கள் அதிகமான மெனக்கெடல்களை செய்ய வேண்டிய நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் 44வது நாளின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான ப்ரமோவில் இன்றைய டாஸ்க் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் சரியாக விளையாடாத நிலையில் பெட்ரூமை மூடுவதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

இரண்டாவது ப்ரமோ: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் நீலம் மற்றும் சிவப்பு கலர் ட்ரேக்களில் லட்டுக்கள் அனுப்பப்பட்டன. இதில் தான் அதிகமாக விரும்பும் போட்டியாளர்களுக்கு நீல நிற ட்ரேவில் உள்ள லட்டுக்களையும் சிவப்பு கலர் ட்ரேக்களில் இருந்த லட்டுக்களை தான் வெறுக்கும் நபர்களுக்கும் ஹவுஸ்மேட்ஸ் கொடுத்து அதற்கான காரணங்களையும் பகிர்ந்துக் கொண்டனர். பூர்ணிமாவிற்கு நீல நிற ட்ரே லட்டை கொடுத்த ரவீனா, இந்த வாரம் அவருடன் சிறப்பான பிரெண்ட்ஷிப்பை மெயின்டெயின் செய்ய விரும்புவதாக குறிப்பிட்டார்.

அதிக லட்டுக்களை வாங்கிய விசித்ரா: இதில் அதிகமான லட்டுக்களை விசித்ரா பெற்றிருந்ததையும் இந்தப் ப்ரமோவில் பார்க்க முடிந்தது. ஜோவிகா உள்ளிட்டவர்கள் அவருக்கு சிவப்பு நிற ட்ரே லட்டுக்களை கொடுத்தனர். மேலும் சில இடங்களில் காட்டப்படும் பாசம் தனக்கு போலியாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே இந்த லட்டுக்குள் ஒரு ட்விஸ்ட் உள்ளதாக இந்த டாஸ்க்கை வாசித்த மாயா குறிப்பிட்டார். தொடர்ந்து லட்டை பிரித்து பார்க்கும்படியாகவும் இந்த ப்ரமோவில் காணப்பட்டது. அதற்குள் என்ன இருந்தது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X