Bigg boss 7: உன் கேமிற்காக ஒரு பெண்ணை எப்படி வேணும்னாலும் நாறடிப்பியா.. விஜய் வர்மா கேட்ட கேள்வி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில் 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
தற்போது 7வது சீசனில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இன்றைய தினம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 68வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சிசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டது. தற்போது 68வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை 7வது சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது நிகழ்ச்சியில் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
18 போட்டியாளர்களுடன் துவக்கம்: தற்போது 7வது சீசன் துவங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் ஆரம்ப போட்டியாளர்களாக 18 பேர் பங்கேற்றனர். அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது. இந்த சீசனில் இரு பிக்பாஸ் வீடுகள் இருந்த நிலையில் எலிமினேஷனும் டபுளாக இருந்தது. மேலும் இரு வைல்ட் கார்ட் என்ட்ரியில் 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைந்தனர். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி களைக்கட்டி வருகிறது.
நோ எலிமினேஷன்: இந்த வார எலிமினேஷனில் விசித்ரா, நிக்சன் உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், நிக்சன் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தை வாட்டி வதைத்த மிக்ஜாம் புயலையடுத்து, ரசிகர்கள் வாக்களிக்க முடியாது என்பதால், இந்த வாரம் பிக்பாஸ் 7 போட்டியில் எலிமினேஷன் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எலிமினேஷனில் இருந்து நிக்சன் தப்பித்துள்ளார்.
வலுக்கும் சண்டைகள்: கடந்த சில தினங்களாக அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையில் அதிகமான சண்டைகள், வாக்குவாதங்கள் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் 68வது நாளில் நிகழ்ச்சி என்ட்ரி கொடுத்துள்ளது. அடுத்தடுத்த இரு பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இதில் கோல்டன் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஜெயிப்பதற்காகவும் விளையாடலாம் மற்றவர்கள் ஜெயிக்கக்கூடாது என்பதற்காகவும் விளையாடலாம் என்று விதிமுறைகள் கூறப்பட்டன.
அடுத்தடுத்த பிரமோக்கள்: தொடர்ந்து இந்த பிரமோவில் விஷ்ணு குறித்து மாயாவிடம் அழுகையினூடே பூர்ணிமா பேசியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் விஷ்ணுவை நேரடியாக விஜய் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஒருவரை தவறாக புரொஜெக்ட் செய்து ஆடிவருவதாக விஷ்ணுவை குற்றம் சாட்டினார். இதையடுத்து பேசிய விஜய் வர்மா, இரண்டாவது வாரத்திலேயே பூர்ணிமா இவளெல்லாம் ஒரு பொண்ணாடா என்று விஷ்ணு கூறியதை போட்டுடைத்தார்.
பூர்ணிமாவை கேவலப்படுத்திய விஷ்ணு: தொடர்ந்து இவளெல்லாம் அடுத்த வீட்டிற்கு போய் என்ன செய்வாள் என்றும் அவர் கூறியதாக விஜய் வர்மா குற்றம் சாட்டினார். இவர் போன்றவர் இந்த கேமிற்கு ஹெல்தியே கிடையாது என்றும் குறிப்பிட்டார். மேலும் உன்னுடைய கேமிற்காக ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் நாறடிப்பாயா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு விஷ்ணு பதில் கூற முயல்வதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











