Bigg boss 7: என்மீது நிக்சன் கோபப்பட ஐஷுதான் காரணம்.. கமலிடம் விசித்ரா ஆதங்கம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி துவங்கியது.

இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 48வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

Vijay TVs Bigg boss 7 shows today promos released 18-11-23

தினேஷ், அர்ச்சனா உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்த நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது 7வது சீசனை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி முதல் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 48வதுவது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. ஏறக்குறைய போட்டியில் நடுக்கட்டத்தில் நிகழ்ச்சி விறுவிறுப்பான அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.

ஆங்கர் கமல்ஹாசன்: இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முதல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் சில தினங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். புதிதான ஆங்கருடன் இந்த நிகழ்ச்சியும் சிறப்பாக களைக்கட்டியது. நிகழ்ச்சியின் பரபரப்பிற்கு நடிகை வனிதா விஜயகுமாரும் பெரிதாக உதவினார். கமல் போலவே அவரும் இந்த போட்டியிலிருந்து இடையில் விலகினார்.

Vijay TVs Bigg boss 7 shows today promos released 18-11-23

கல்வி குறித்த விவாதம்: தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் துவக்கத்தில் கல்வி இடைநிற்றல் குறித்து விசித்ராவுடன் ஜோவிகா மேற்கொண்ட விவாதம் பல கேள்விகளை முன்னெடுத்தது. சமூக வலைதளங்களிலும் இவர்களின் இந்த வாக்குவாதங்கள் அதிகமான கவனத்தை பெற்றன. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய சீசன் மிகச்சிறப்பாக நித்தம் ஒரு டாஸ்க், பிரச்சினைகள், சண்டைகள், விவாதங்களுடன் களைகட்டி வருகின்றன.

48வது நாளில் என்ட்ரி: இந்த நிகழ்ச்சி தற்போது 48வது நாளில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், இதுவரை போட்டியிலிருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 5 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளனர். இதையடுத்து போட்டி ரசிகர்களை கவரும்வகையில் சிறப்பாக அமைந்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பின் எலிமினேஷன் பல கேள்விகளை எழுப்பியது. கமல் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கானா பாலா வெளியேற்றம்?: இந்நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து கானா பாலா வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றைய நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன. இதில் நிகழ்ச்சியில் மரியாதை எதிர்பார்க்கப்படுவதாக கமல் தெரிவித்துள்ளார். மேலும் மாயா மற்றும் நிக்சன் மீது சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியதையும் கேட்ட கமல்ஹாசன் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்றும் ப்ரமோக்கள் மூலம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

Vijay TVs Bigg boss 7 shows today promos released 18-11-23

3வது ப்ரமோ: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 3வது ப்ரமோவில் மரியாதை குறித்து கமல் கேள்வி எழுப்ப, நிக்சன் தன்னை சார் என கூப்பிடுவீர்களா என்று கேட்டதாகவும் தான் நிக்சன் சார் என்று கூப்பிடத் துவங்கியுள்ளதாகவும் விசித்ரா கூறுவதாக அமைந்துள்ளது. இதையடுத்து பேசிய நிக்சன் தன்னை சார் என்று கூப்பிட தான் சொல்லவே இல்லை என்று கூறுகிறார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், அவர் அப்படி சொன்னதை தான் பார்த்ததாக கூறுவதாகவும் தற்போதைய 3வது ப்ரமோவில் காணப்படுகிறது.

கமலிடம் விசித்ரா ஆதங்கம்: தொடர்ந்து நியாபகம் இல்லையா என்று கமல் கேட்கிறார். உங்களுக்கு அது தவறாக தோன்றவில்லையா என்றும் கமல் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து பேசும் விசித்ரா, கடந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட ஐஷு எலிமினேட் ஆனதற்கு தான்தான் காரணம் என்று நிக்சன் கூறுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். அந்தக் கோபத்தைத்தான் அவர் தன்மீது காட்டியதாகவும் தன்னுடைய ஆதங்கத்தை விசித்ரா வெளிப்படுத்துகிறார்.

கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்: அப்படி நிக்சன் நினைக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், அப்படி விசித்ராவிடம் கோபப்பட்டாரா என்றும் கேட்கிறார். தொடர்ந்து உண்மையை தான் புரிய வைக்க ட்ரை செய்யட்டுமா என்றும் கமல் கேட்பதாக தற்போது வெளியாகியுள்ள இன்றைய தினத்தின் 3வது ப்ரமோவில் காணப்படுகிறது. கமலின் அடுத்தடுத்த இந்த கேள்விகளுக்கு என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் நிக்சன் முழிப்பதாகவும் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X