BB 7 show: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ள தினேஷ்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சின்னத்திரையில் அடுத்தடுத்த சீரியல்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தினேஷ்.

நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் தினேஷ். சீரியலில் இணைந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

Vijay TVs Bigg boss 7 wild card contestant Dinesh getting 18 -20K per episode as salary

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் தினேஷ்: சின்னத்திரையில் அடுத்தடுத்த தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் நடிகர் தினேஷ் கோபால்சாமி. நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சீரியலில் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்த தொடர்கள்: ஈரமான ரோஜாவே 2 மற்றும் கிழக்கு வாசல் ஆகிய தொடர்களில் நடித்துவந்த தினேஷ், திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். கடந்த 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இவரை அறிமுகம் செய்து வைத்தபோது தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் தான் 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக தனக்கு தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

ரச்சிதாவுடனான பிரிவு: கடந்த சீசனில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, வெளியிலிருந்து அவருக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார் தினேஷ். தான் ரச்சிதாவுடன் இணைந்து வாழவே விரும்புவதாகவும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்த நிலையில், தாங்கள் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ரச்சிதா உறுதியாக கூறியுள்ளார். மேலும் விவாகரத்திற்கு அப்ளை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் தினேஷ்: இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ள தினேஷ், முதல் நாளிலேயே கேப்டன் பூர்ணிமாவிற்கு எதிராக கருத்துக்களை கூறியதால், அவர்களுக்குள் வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. மேலும் யுகேந்திரன் கேப்டனாக இருந்தபோது செய்த சில விஷயங்களை பாராட்டி பேசியதன்மூலம் பூர்ணிமாவின் கேப்டன் பொறுப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக பிரதீப்பிற்கு டஃப் கொடுக்கும்வகையில் தினேஷின் செயல்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ் சம்பளம்: இதனிடையே கிழக்கு வாசல் தொடரில் அர்ஜூன் கேரக்டரில் அதிரடியாக நடித்துவந்த தினேஷ், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளதால், அவருக்கு பதிலாக வேறு நடிகர் நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பதற்காக ஒரு எபிசோடிற்கு 18 முதல் 20 ஆயிரம் வரை தினேஷிற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அடுத்தடுத்த எபிசோட்களில் தினேஷின் அதிரடி செயல்பாடுகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X