இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சந்திப்பு.. பிக்பாஸ் புகழ் அன்ஷிதா.. விஜே விஷால்.. களைகட்டுதே!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த ஷோவில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் மற்றும் 6 வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் என 24 போட்டியாளர்கள் விளையாடினர்.

துவக்கத்தில் களைகட்டாத இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த போட்டியாளர்களின் வித்தியாசமான டாஸ்க்குகள் மற்றும் அடிதடியால் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டிலை தட்டித் தூக்கிய நிலையில், சவுந்தர்யா ரன்னர் அப்பாக மாஸ் காட்டினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அன்ஷிதா மற்றும் விஷாலும் காணப்பட்டனர்.

bigg boss tamil 8 show anshitha 8

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக காணப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களை கமல்ஹாசன் சிறப்பாக்கிய நிலையில், நடந்து முடிந்துள்ள 8வது சீசனை விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி இந்த ஷோ துவங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 106 நாட்கள் நடத்தப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான நிறைவு விழாவுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 6 பேர் நுழைந்து மேலும் கலகலப்பாக்கினர்.

களைகட்டிய நிகழ்ச்சி: துவக்கத்தில் சாதாரணமாக இருந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த போட்டியாளர்களால் களைகட்டியது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளர்களாக முத்துக்குமரன், சவுந்தர்யா, தீபக், ஜாக்குலின், அன்ஷிதா, விஜே விஷால் என பல போட்டியாளர்களை பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் கோப்பையை கைப்பற்றிய நிலையில், சவுந்தர்யா ரன்னர் அப்பாக மாறினார். மேலும் அன்ஷிதா மற்றும் விஜே விஷால் இடையில் நல்ல பழக்கம் இருந்த நிலையில், இவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சந்திப்பு: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட முத்துக்குமரன், தீபக்கை அவரது வீட்டில் போய் சந்தித்த நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு, சத்யா, அருண், விஷால், அன்ஷிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியில் சந்தித்துள்ளனர. மேலும் பிக்பாஸ் போட்டியாளர் ரயான் நடிப்பில் ரிலீசாகியுள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் FDFSஐயும் கேங்காக சென்று பார்த்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவையும் சந்தித்து தங்களது உற்சாகத்தை இந்த டீம் வெளிப்படுத்தியுள்ளது.

அன்ஷிதா -விஷால் காதல்?: அன்ஷிதாவும் விஷாலும் காதலிப்பதாக தொடர்ந்து கூறப்பட்டுவரும் நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் தனியாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பிக்பாஸ் பைனல் மேடையில் என்ட்ரி கொடுத்த அன்ஷிதா, தான் முன்னதாக காதலித்த நபரை பிரேக்கப் செய்ததாக வெளிப்படையாக கூறியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்தது. விஷால் மீதான காதல்தான் அவரது இந்த முடிவுக்கு காரணமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதனிடையே விஷாலுடன் இணைந்து அடுத்தடுத்த நிகழ்வுகளில் அன்ஷிதா பங்கேற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X