பிக்பாஸ் பைனல்ஸ்ல நிக்கும்போது எப்படி இருந்துச்சு.. 2வது இடம்பிடித்த சவுந்தர்யா கொடுத்த முதல் பேட்டி
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 106 நாட்கள் நடந்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக மாறி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த 8வது சீசன் விஜய் சேதுபதி ஹோஸ்டிங்கில் களைகட்டியது. சில விமர்சனங்களையும் அவர் பெற்ற போதிலும் அவரது பிரசன்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாகவே அமைந்தது. இந்த சீசனில் முத்துக்குமரன் டைட்டிலை தட்டி தூக்கிய நிலையில் சௌந்தர்யா ரன்னர் அப்பாக மாஸ் காட்டினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தவுடன் தான் செய்த விஷயங்கள் குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அவர் பல்வேறு தகவல்களை பதிந்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. 7 சீசர்களை நடிகர் கமல்ஹாசனின் ஹோஸ்டிங்கில் நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி இந்த எட்டாவது சீசனில் புதிய ஹோஸ்டாக நடிகர் விஜய் சேதுபதியை நிறுத்தி அழகு பார்த்தது. அவரும் தன்னுடைய பங்கிற்கு இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அட்ராக்ஷனை கொடுத்திருந்தார். அவர் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதிலும் அவரது ஹோஸ்டிங் இந்த சீசனுக்கு மிகச் சிறப்பாகவே அமைந்தது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இடையில் ஆறு வைல்ட்கார்ட் என்ட்ரி போட்டியாளர்களையும் சேர்த்துக் கொண்டது.
பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா: ஏறக்குறைய 106 நாட்கள் இந்த நிகழ்ச்சி தொடர்ந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. ஆடல், பாடல், கொண்டாட்டத்துடன் நடந்த இந்த இறுதிப் போட்டியில் முத்துக்குமரன் கோப்பையை தட்டி தூக்கினார். ரன்னர் அப்பாக சௌந்தர்யாவும் மாஸ் காட்டினார். இந்நிலையில் 106 நாட்கள் கடந்து தன்னுடைய குடும்பத்தினரையும் காதலரையும் சந்தித்துள்ள சௌந்தர்யா அது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னுடைய வீட்டிற்கு போனவுடன் வாய்க்கு ருசியாக அடுத்தடுத்த சாப்பாடை சாப்பிட்டதாகவும் நன்றாக தூங்க முயற்சித்ததாகவும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
தூக்கம் வராமல் தவிப்பு: ஆனால் தனக்கு தூக்கம் அவ்வளவு எளிதில் வரவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறைப்பட்டு கொண்டதை பார்க்க முடிந்தது. விரைவில் தான் நடிக்கும் படத்தின் அப்டேட்டை அறிவிக்க உள்ளதாகவும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் போட்டியில் சௌந்தர்யா ரயான் மற்றும் ஜெப்ாயுடன் அடுத்தடுத்து நட்புடன் பழகியத்தை பார்க்க முடிந்தது. ஆனால் தனக்கு ஜெப்ரியை விட ரயான் தான் மிகவும் பிடித்தமான நண்பர் என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார். ஜெப்ரி திமிருடன் காணப்படுவார் என்றும் அதனால் ரயான் தான் தன்னுடைய ஃபேவரைட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பீதியாக உணர்ந்த சௌந்தர்யா: இதேபோல நிகழ்ச்சியில் தீபக்கிடம் பேசுவதற்கு தான் மிகவும் பயப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஜாக்குலினை நிகழ்ச்சியில் மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் தங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சியில் நிற்கும்போது தனக்கு மிகவும் பீதியாக இருந்ததாகவும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். ஆனால் தன்மீது இவ்வளவு மக்கள் பாசத்துடன் இருந்ததை பார்த்து தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு தன்னுடைய அன்பை அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











