Bigg boss tamil 8: முட்டாள்தனமா செஞ்சவன தூக்கி ஜெயில்ல போடு.. டெவில் டாஸ்க்கில் கடுப்பான அருண்!

சென்னை: விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவாக 7 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் 60 நாட்களை கடந்து நடைபோட்டு வருகிறது. இந்த ஷோவில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை இணைத்து வருகிறது சேனல். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர் விஜய் சேதுபதி பாராட்டுக்களுக்கு இணையாக சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

அவர் போட்டியாளர்களிடம் நேரடியாக அவர்களை தாக்கும்வகையில் பேசிவருவதாகவும் இதனால் அவர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் கடுப்பாகி வருவதாகவும் கூறப்பட்டுவரும் நிலையில், அடுத்தடுத்து ஸ்கூல் டாஸ்க், பொம்மை டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்தனர். இதனிடையே தற்போது டெவில் ரவுண்ட்டில் போட்டியாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

bigg boss tamil 8 vijay sethupathi

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்த சீசன்களில் மாஸாக அமைந்த நிலையில் கடந்த சீசன்வரை நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்திருந்தார். வேலைப் பளு காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ள அந்த இடத்திற்கு புதிதாக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்றே இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக அடுத்தடுத்த வாரங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆனாலும் அவரது தடாலடியான பேச்சு விமர்சனங்களையும் போட்டியாளர்களிடம் சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஏஞ்சல்ஸ் vs டெவில் டாஸ்க்: இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து ஸ்கூல் டாஸ்க், பொம்மை டாஸ்க் என களைகட்டிய நிலையில் தற்போது ஏஞ்சல்ஸ் vs டெவில் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல இந்த டாஸ்கிலும் அடுத்தடுத்து சவுந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா இடையில் ஏற்பட்ட சண்டையில் இடையில் நுழைந்த சவுந்தர்யா, தர்ஷிகாவிற்கு எதிராக தன்னுடைய டெவில் பர்பார்மென்சை மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்தடுத்த பிரமோக்களை சேனல் வெளியிட்டு வருகிறது.

கடுப்பான அருண்: இதில் நடிகர் அருண் பிரசாத்தும் மிகவும் கடுப்பானதையும் பார்க்க முடிந்தது. இன்றைய தினத்திற்கான மூன்றாவது பிரமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பேசும் அருண், டெவில் உலகத்தில் ஒருவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் சைக்கலாஜிகலாக அதை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். டாஸ்கை விளையாடாமல் அவர்களின் வாயில் முட்டையை தடவுவது எந்தவகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்புகிறார். இதை யார் செய்தார்களோ அவர்களை தூக்கி ஜெயிலில் போடவேண்டும் என்றும் முத்துக்குமரனுக்கு எதிராக அவர் கோபத்துடன் பேசுவதையும் இந்த பிரமோவில் பார்க்க முடீந்தது.

தூக்கி ஜெயிலில் போடு: முட்டாள்தனமாக மூளையில்லாமல் இப்படி செய்தவர்களை தூக்கி ஜெயிலில் போட வேண்டும் என்றும் அவர் ஆக்ரோஷமாக பேசுகிறார். இதையடுத்து அவரைப் பார்த்து சிரிக்கும் முத்துகுமரனைப் பார்த்து ஏன் சிரிக்கிறார் என்று கடுப்புடன் கேள்வி எழுப்பும் அருண், தொடர்ந்து அவன் இவன் என்றும் பேசத் துவங்குகிறார். யாரை ஜெயிலுக்கு அனுப்புகிறீர்கள் என்ற தான் பார்ப்பதாகவும் கூறுகிறார். இதனால் உடனிருக்கும் போட்டியாளர்கள் ஒருபக்கம் அவருக்கு எதிராக பேசுவதையும் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X