Our new Boss.. அடுத்தடுத்த பிரமோக்கள்.. மொபைலை வைத்து ஆட்டம் காண்பித்த விஜய் சேதுபதி!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியின் மற்றொரு சூப்பர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய ஆட்டத்தை துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பேச்சுடன் களமிறங்கவுள்ளார் நிகழ்ச்சியின் ஆங்கர் விஜய் சேதுபதி.
கடந்த ஏழு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், இந்த 8வது சீசனிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்வார் என்று கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஆங்கராக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ள நிலையில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பிரமோவுடன் இந்த நிகழ்ச்சியில் அவர் களம் இறங்கவுள்ளார். கடந்த ஏழு சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆங்கராக மாஸ் காட்டிய நிலையில் இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி ஆங்கராக இணைந்துள்ளார். நிகழ்ச்சி துவங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் 8 புதிய பிரமோ: அந்த வகையில் இன்றைய தினமும் புதிய பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த புதிய பிரமோவில் மாஸாக காணப்படும் நிலையில், இவர் எங்க பாஸ் என்று அவரை, பிக்பாஸ் டீம் சுட்டிக் காட்டியுள்ளது. அவரும் சும்மா இருக்காமல், தன்னுடைய மொபைலை தூக்கிப் போட்டு விளையாடுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. அதில் ஒரு கட்டம் போட்டு, மொபைல் அதில் வரும்போது சரியாக ஃபிரீஸ் செய்யவும் ரசிகர்களை கேட்டுக் கொண்டது. அப்படி செய்தால் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் விளையாட்டு காட்டியுள்ளது விஜய் டிவி.
பிக்பாஸ் போட்டியாளர்கள்: பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ் கான், நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகைகள் பவித்ரா ஜனனி, அன்ஷிதா, தர்ஷா குப்தா, ஐஸ்வர்யா, நடிகர் அர்னவ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக நிகழ்ச்சியின் பழைய போட்டியாளர்கள் பங்கேற்கும் முன்னோட்ட நிகழ்ச்சியும் இந்த பிரம்மாண்ட துவக்கவிழாவில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் யார் எல்லாம் பங்கேற்பார்கள் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் தொடர்ந்து இருந்து வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.
விஜய் சேதுபதியின் சம்பளம்: மேலும் ஒவ்வொரு போட்டியாளரும் இந்த நிகழ்ச்சியில் எத்தனை நாட்கள் இருக்கிறார்களோ, அதற்கு அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. இந்த சீசனிலும் சினிமா, வெப் தொடர்கள், மாடலிங், தொலைக்காட்சி என அடுத்தடுத்த துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் புதிய ஆங்கராக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு எபிசோடுக்கு 15 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் வாரயிறுதி நாட்களில் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்ற வகையில் ஏறக்குறைய 15 நாள் இவரது சூட்டிங் நடத்தப்படும்.


Click it and Unblock the Notifications











