24 மணிநேரத்தில் முதல் எவிக்ஷன்.. வெளியேறுவது இவரா.. விஜய் சேதுபதி ரீல் மகளுக்கு வந்த சோதனை?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி, நேற்றைய தினம் 18 போட்டியாளர்களையும் சிறப்பான அறிமுகத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் 24 மணி நேரத்திலேயே முதல் எவிக்ஷன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 2வது நாளுக்கான முதல் பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்த எவிக்ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடந்ததை பார்க்க முடிந்தது.

television bigg boss 8 show vijay tv 8

பிக்பாஸ் 8 ஷோ: நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்துள்ள நிலையில் ஒன்பது ஆண் போட்டியாளர் மற்றும் 9 பெண் போட்டியாளர் என சரிசமமாக இணைந்திருந்தனர். இதில் அதிகமான போட்டியாளர்கள் டெரராக உள்ள நிலையில் இந்த சீசன் அதிகமாக களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் சம்சாரம் அது மின்சாரம் படத்தை போல இடையில் கோடு போடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த மாற்றங்கள்: ஆண் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களும் தனித்தனியாக தங்க வேண்டும் என்று புதிய விதிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்பதற்கு ஏற்ப இந்த நிகழ்ச்சியில் முதல் 24 மணி நேரத்தில் முதல் எவிக்ஷன் நடைபெறவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்களிடம் மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அது எப்படி ஒரு நாளில் ஒருவரை ஜட்ஜ் செய்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடியும் என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

முதல் பிரமோ: இதனிடையே தற்போது இரண்டாவது நாளான இன்றைய தினத்திற்கான முதல் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் அது எப்படி ஒரே நாளில் ஒருவரை எவிக்ட் செய்து வெளியேற்ற முடியும் என்று கேள்வி எழுப்புவதாக காணப்படுகிறது. இதனிடையே இந்த எவிக்ஷனுக்கான நாமினேசன் பிராசஸும் இன்றைய தினம் நடந்துள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் 20 வயது கூட நிரம்பாமல் உள்ளே நுழைந்துள்ள விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா, இன்றைய தினம் எவிக்ட் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே விஜய் சேதுபதியின் ரீல் மகளுக்கா இந்த நிலைமை என்று ரசிகர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

எவிக்ஷனாகும் விஜய் சேதுபதியின் ரீல் மகள்: மகாராஜா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சாச்சனா, இளம் போட்டியாளரான பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் நுழைந்தது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து எதுஎது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்னதாகவே இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் வெளியேறும் இவர் மீண்டும் வைல்ட்கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X