BB8 show: தர்ஷா மேகி கன்டன்ட் பண்றாங்க.. அவங்க தமிழ்நாட்டுக்கு வந்த கதை தெரியுமா?.. ரவீந்தர் ஓபன்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த 6ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக கடந்த 7 சீசன்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து இந்த சீசனில் விலகியுள்ளார்.
இதையடுத்து 8வது சீசனின் புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இவரது புதிய பங்கேற்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கமல்ஹாசன் தன்னுடைய ஸ்டைலில் போட்டியாளர்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் அடித்து வருகிறார்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை நடிகர் கமல்ஹானின் ஹோஸ்ட்டிங்கில் சிறப்பாக நிறைவு செய்துள்ள நிலையில், கடந்த 6ம் தேதி முதல் நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கியுள்ளது. கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி களைகட்டிய நிலையில் தற்போது புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். கடந்த 6ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கிய நிலையில், அடுத்தடுத்து 2 வாரயிறுதி எபிசோட்களில் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளார். அந்த நாட்களில் இந்த நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறி வருவதை பார்க்க முடிந்தது.
தயாரிப்பாளர் ரவீந்தர்: இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே சாச்சனா நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன நிலையில், இவருக்கு அதிகமான ஆதரவு இருந்த நிலையில், சில தினங்களிலேயே மீண்டும் நிகழ்ச்சியில் இவர் சேர்ந்துக் கொண்டார். இதையடுத்து முதல் வார எலிமினேஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து கடந்த வாரத்தில் சீரியல் நடிகர் அர்ணவ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து அடுத்த வாரத்தில் தீபாவளியையொட்டி இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த வாரத்திற்கான நாமினேஷனும் செய்யப்பட்டுள்ளது.
தர்ஷா குப்தா குறித்து ரவீந்தர்: இதனிடையே, நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன தயாரிப்பாளர் ரவீந்தர், இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த நாளின் போட்டிகள், நிகழ்ச்சியின் போட்டியாளர்கள், அவர்களின் பலவிதமான செயல்பாடுகள் என அடுத்தடுத்து பேசி வருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் ஹைலைட்டாக இருந்த தர்ஷா குப்தா குறித்தும் இவர் பேசியுள்ளார். பெங்களூரில் டீச்சராக இருந்த தர்ஷா குப்தா, பாண்டி பஜாரில் ஜாக்கெட் தைப்பதற்காகவே சென்னை வந்ததாகவும் அப்போது அங்கு ஒருசிலர், அவர் மாடலிங் செய்யலாமே என்று கூற, தர்ஷா குப்தாவின் சினிமா பயணம் துவங்கியுள்ளதாகவும் ரவீந்தர் பேசியுள்ளார்.
தர்ஷா செய்யும் மேகி கண்டன்ட்: தொடர்ந்து பேசிய ரவீந்தர், தர்ஷா குப்தா பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் மேகி கண்டன்ட் செய்வதாகவும் அவர் செய்யும் கண்டன்ட் 2 நிமிடங்களுக்கு மேல் நிலைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். பேச வேண்டிய இடத்தில் பேசாமலும், பேச தேவையில்லாத இடத்தில் வளவளவென பேசியும் தர்ஷா குப்தா பல நேரங்களில் காமெடி செய்துள்ளதாகவும் ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார். அவர் போடும் பாதி சண்டைகள் ஃபேக்காகத்தான் இருக்கும் என்று கூறியுள்ள ரவீந்தர், சௌந்தர்யா மாதிரி இல்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று தர்ஷா குப்தா யோசிப்பதற்காகவே அவரை பாராட்டலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











