ரவீந்தரை நேரடியாக கைக்காட்டிய ரஞ்சித்.. கேள்வி கேட்ட விஜய் சேதுபதி.. என்ன இப்படி மாஸ் காட்டறாரு!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்டாக இணைந்துள்ள பிக்பாஸ் 8 நிகழ்ச்சி யின் வார இறுதி எபிசோட்டிற்கான அடுத்தடுத்த ப்ரோமோக்கள் இன்றைய தினம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியில் அதிரடி சரவெடியாக இணைந்த நடிகர் விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களிடமும் சாட்டையை சுழற்றியதை பார்க்க முடிந்தது.

மனிதர் என்ன இப்படி அனைவரையும் வறுத்தெடுக்கிறாரே என்பதாக இந்த எபிசோடில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. தனக்கேயுரிய கம்பீரம் மற்றும் கவர்ச்சியான பேச்சுடன் அவர் நிகழ்ச்சியில் பேசிய நிலையில், இந்த வாரத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் போட்டியாளர்கள் பேசியுள்ளனர்.

bigg boss tamil 8 vijay sethupathi 8


பிக்பாஸ் தமிழ் 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 8வது சீசனை துவங்கியுள்ள நிலையில் இந்த சீசனில் அதிரடி சரவெடியாக புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. நிகழ்ச்சியில் இன்றைய தினம் வார இறுதி நாளில் அவரது அதிரடி ஹோஸ்டிங்கையும் ரிவ்யூவையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது அவர் மிகச் சிறப்பாக போட்டியாளர்களை எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது. இதன் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் வெளியான நிலையில் முதல் பிரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் தங்களுடைய ஆட்டத்தை ஆடவில்லை என்றும் ஏதோ பிக்னிக் வந்தது போல நடந்து கொள்வதாகவும் தன்னுடைய குற்றச்சாட்டை வைத்திருந்தார் விஜய் சேதுபதி.

வீக்எண்ட் எபிசோட்: இதையடுத்து வெளியான 2வது பிரமோவில் சுனிதாவை கலாய்க்கும்வகையில் அவரது டிரெஸ் மிகவும் அழகாக இருப்பதாக கூறுகிறர் விஜய் சேதுபதி. இதை கட் செய்துவிடும்படியும் கூறி சுனிதாவை வெறுப்பேற்றுகிறார். தொடர்ந்து ஃபேட்மேனிடம் இந்த வாரத்துடன் போய்விடுவேன் என்று சொன்னீர்களே என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து தான் செய்த சேட்டை அப்படி என்று ரவீந்தர் தன்னிலை விளக்கம் கொடுக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் விமர்சகராக மாறியது குறித்தும் கேட்கிறார். தொடர்ந்து ஜாக்குலின் தான் சண்டை போடவில்லை என்று கூற, இனிமையாக அவர் பேசினாரா என்று விஜய் சேதுபதி கேட்கிறார்.


அடுத்தடுத்த பிரமோக்கள்: தொடர்ந்து தர்ஷா குப்தா பேசிய நிலையில் குழுவாக அனைவரும் செயல்படுவதாக அவர் கூற அவரை உட்கார கூறுகிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து இந்த ஷோ ஹோஸ்டை வைத்து இல்லை என்றும் போட்டியாளர்களை வைத்துதான் என்றும் அவர் காட்டமாக தெளிவு படுத்துகிறார். தொடர்ந்து வெளியான 3வது பிரமோவில் நிகழ்ச்சியில் ரவீந்தர் தனக்காகத்தான் பிராங்க் செய்ததாகவும் ரஞ்சித்திற்காக செய்யவில்லை என்றும் போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து Prank go wrong என்று தீபக் விளக்கம் கொடுக்கிறார். இதையடுத்து பேசிய தர்ஷிகா, தங்களில் ஒருத்தி அந்த டீமில் உள்ளதாகவும் நாமினேஷன் குறித்து தெரிந்திருந்தால் அவர் இதில் ஈடுபட்டிருக்க மாட்டாள் என்றும் கூறுகிறார். ரவீந்தர்மீது ரஞ்சித் குற்றச்சாட்டு: இதையடுத்து தன்னிடம் சொல்லிவிட்டு ரவீந்தர் இந்த விஷயத்தை செய்யவில்லை என்று ரஞ்சித் குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து ரவீந்தரிடமே விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப, அவரோ மிகவும் மன உளைச்சலுடன் திரும்புவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிபயுள்ள பீனிக்ஸ் வீழான் படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூர்யா படக்குழுவினருடன் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே சோவில் அப்பாவும் மகனும் இணைந்து எப்படிப்பட்ட நிகழ்வுகளை கொடுப்பார்கள் என்பது குறித்தும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X