Bigg Boss 8: விஜய் டிவி ஜாக்குலினை காப்பாத்திட்டாங்களாம்.. கடைசியில் இந்த வார பலியாடு இவர் தானாம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய துவக்கத்தை பிரம்மாண்டமாக துவங்கிய நிலையில், நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களும் மிகச்சிறப்பான அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர். பல துறைகளை சேர்ந்த இவர்களை நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக வரவேற்றதை பார்க்க முடிந்தது.
அவரது டிரேட்மார்க் முத்தத்துடன் அவர போட்டியாளர்களை வரவேற்ற நிலையில், இன்று மற்றும் நாளை வாரயிறுதி ஸ்பெஷலாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார்.இதற்கான பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இந்த வார எலிமினேஷன் குறித்து அடுத்தடுத்த கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் 8: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய 8வது சீசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் இணைந்த நிலையில் இவர்கள் தனித்தனியாகவே தங்களது போட்டியை பிக்பாஸ் வீட்டில் நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத நிகழ்வாக முதல் 24 மணிநேரத்திலேயே நடிகை சாச்சனாவை எலிமினேட் செய்தார் பிக்பாஸ். தற்போது இவர் மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் போட்,டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த வார எலிமினேஷன்: நிகழ்ச்சியின் வாரயிறுதி நாளான இன்றும் நாளையும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ள நிலையில், இதன் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் யாரும் ஆட்டத்தை ஆடவேயில்லை என்றும் பிக்னிக் வந்தை போல இருப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ள நிலையிலி, இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது அதிரடிகளை பார்க்க ரசிகர்கள் தயாராகியுள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் உள்ள நிலையில், இதற்கான நாமினேஷன் முன்னதாக நடந்துள்ளது.
ஜாக்குலின் வெளியேறுவாரா?: இந்த வார நாமினேஷனில் ரவீந்தர், ரஞ்சித், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, அருண் பிரசாத் ஆகிய 6 பேர் இடம்பெற்றிருந்தனர். இதில் அருண் பிரசாத் இதிலிருந்து தப்பியுள்ளார். நேற்றைய எபிசோடில் நாமினேஷன் ப்ரீ பாஸை அவர் வென்றுள்ள நிலையில், தற்போது அவர் எலிமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். இதையடுத்து குறைவான வாக்குகளுடன் ஜாக்குலின் மற்றும் ரவீந்தர் உள்ளனர். இவர்களில் ஜாக்குலீன் வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே ஜாக்குலினை தற்போது எலிமினேஷனில் இருந்து விஜய் டிவி காப்பாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலிமினேஷன் இவர்தானா?: இதையடுத்து ரவீந்தர்தான் தற்போது நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பிக்பாஸ் சீசனில் அதிக சம்பளம் வாங்குபவராக இருந்த ரவீந்தர் தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித்துடன் இணைந்து இவர் பிராங்க் செய்து பெண் போட்டியாளர்களை கடுப்பேற்றியதையும் பார்க்க முடிந்தது. இவர் நிகழ்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











