பிக்பாஸ் 8: நீங்கதான் முதல் எவிக்ஷன்.. ஜாக்குலினை கடுப்பேற்றிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நேற்றைய தினம் தன்னுடைய 8வது சீசனை துவங்கியுள்ளது. இதன் புதிய ஆங்கராக ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி. அவரது புதிய ஹோஸ்டிங்கில் நேற்றைய தினம் துவக்க விழாவிலேயே நிகழ்ச்சி களைகட்டியது.
பிக்பாஸ் 8 ஷோவில் தற்போது 18 போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். சின்னத்திரை நடிகர்கள், தொகுப்பாளர்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், 24 மணிநேரத்திலேயே முதல் எவிக்ஷன் இருக்கும் என்று நேற்றைய ஷோவின் இறுதியில் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக 7 சீசன்களை இதுவரை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் ஷோ. இந்த ஷோவின் ஹோஸ்ட்டாக கடந்த 7 சீசன்களில் மாஸ் காட்டினார் கமல்ஹாசன். இதனிடையே, படங்களின் கமிட்மெண்ட் காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனில் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக கிளமிறங்கியுள்ளார். அவரை வைத்து முன்னதாக பல பிரமோக்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
18 போட்டியாளர்கள்: இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் சிறப்பான முறையில் நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் முதல் 24 மணிநேரத்திலேயே இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் எவிக்ட் ஆகவுள்ளதாக நேற்றைய னமே அவர் அறிவித்திருந்தார். இந்த விஷயம் அனைத்து போட்டியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கான நாமினேஷனும் தற்போது நடந்து முடிந்துள்ளது.
2வது பிரமோ ரிலீஸ்: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள பிரமோ 2வில் ஜாக்குலின் தீபக் மற்றும் ரவீந்தர் உள்ளிட்டவர்களுடன் பேசுவதாக காணப்பட்டது. தான் தன்னுடைய பெட்டைகூட விட்டுக் கொடுக்க தயாராகவுள்ளதாகவும் ஆனால் 4 வாரங்களுக்கு நாமினேஷன் மட்டும் செய்ய வேண்டாம் என்று தீபக் உள்ளிட்டவர்களிடம் அவர் கூறுவதாக இதில் காணப்படுகிறது. இதனிடையே நாமினேஷன் ஃபிரீ என்ற டீலுக்கு டீம் ஒத்துப்போனது உடன்பாடு இல்லையா என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்ப, அனைவருக்கும் சேர்த்துதான் இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயத்தை ஜாக்குலின் வேண்டாம் என்று கூறுவதை ரவீந்தர் சுட்டிக் காட்டுகிறார்.
எவிக்ஷனுக்கு தயாரான ஜாக்குலின்: இதையடுத்து பேசும் ஜாக்குலின், வசதியான பெட்டில் படுத்து தூங்குவதை காட்டிலும், வேண்டும் என்பவர்களைதானே நாமினேட் செய்ய வேண்டும் என்று தான் கருதுவதாக கூறுகிறார். இதையடுத்து, இந்த விஷயத்தில் ஜாக்குலின் உடன் படாததால், 24 மணிநேரத்தில் வெளியேறும் முதல் போட்டியாளராக அவர்தான் இருப்பார் என்று தீபக் உள்ளிட்டவர்கள் கூறுகின்றனர். இதை கேட்கும் ஜாக்குலின் பரவாயில்லை என்று எவிக்ஷனுக்கு தான் தயார்தான் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. முதல் நாளிலேயே தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற தயார் என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











