ரவீந்தரின் கேமை ஆட விடாமல் தடுத்தாரா ரஞ்சித்?.. பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் என்னதான் நடக்குது?

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி மிகப்பெரிய பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களையும் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். கடந்த ஐந்து தினங்களில் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த நிகழ்வுகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியும் மிகுந்த பரபரப்புடன் துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையிலான பனிப்போர், ரஞ்சித் மற்றும் ஃபேட்மேன் இடையிலான பூசல்களும் நாளைய தினம் ரிவ்யூவிற்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

bigg boss tamil 8 vijay sethupathi 8

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக அதிரி புதிரி எபிசோடுகளாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 6ம் தேதி பிரமாண்டமான துவக்க விழாவுடன் நடிகர் விஜய் சேதுபதி துவங்கி வைத்திருந்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் நிகழ்ச்சியில் அவரது ரிவ்யூ மிகுந்த எதிர்பார்ப்புடன் நிகழ உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளர்களை பிஸியாக வைத்து வருகிறார் பிக் பாஸ். ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினரும் தனித்தனியாக இந்த நிகழ்ச்சியில் தங்கி வரும் நிலையில் அவர்களுக்கு தனித்தனியான டாஸ்குகளை கொடுத்து வருகிறார்.

ரவீந்தர் -ரஞ்சித் மோதல்: நிகழ்ச்சியில் ஜாக்குலின் மற்றும் சுனிதா இடையிலான பனிப்போர் ஒருபுறம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, ரஞ்சித் மற்றும் ஃபேட்மேன் இடையிலும் அடுத்தடுத்த பூசல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில், இன்றைய தினத்திற்கான மூன்றாவது பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அடுத்தடுத்து விஜே விஷால், ரஞ்சித் ரவீந்தரை குற்றம் சாட்டுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து கோபமடைந்த ஃபேட்மேன் அவர்கள் சொல்வதை கேட்க முடியாது என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். மேலும் தர்ஷிகா, தர்ஷாவையும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து அவர்களும் கோபத்துடன் பேசுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.

கேமை ஆடவிடுங்கள்: தொடர்ந்து தான் தன்னுடைய கேமை ஆடுவதாகவும், அதில் இத்தனை பேருக்கு எப்படி கோபம் வரலாம் என்றும் ரவீந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து நிதானமாக மாறிய ரஞ்சித், உங்களுடைய கேமை நீங்கள் ஆடுங்கள், ஆனால் அதில் ஏன் என்னுடைய பெயரை இழுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வியும் ரவீந்தரை கோபத்திற்குள்ளாக்குகிறது. தொடர்ந்து ஆவர் ஆவேசத்துடடன் பேச முற்படுவதாகவும் ஆனால் தன்னுடைய வாயை கப்பென்று மூடிக்கொள்வதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது.


விஜய் சேதுபதி என்ட்ரி: கடந்த திங்கட்கிழமை முதல் அதிரிபுதிரி பரபரப்புடன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படும் நிலையில் நாளைய தினம் இவர்களின் செயல்பாடுகளுக்கு விஜய் சேதுபதி எப்படிப்பட்ட ரிவ்யூ கொடுப்பார் என்றும் நாளைய தினம் யார் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கான நாமினேஷனும் நடந்துள்ள நிலையில், ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் நாளைய தினம் விஜய் சேதுபதியின் செயல்பாடு மற்றும் பேச்சு காணப்படும் என்று எதிர்பார்க்கலாம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X