Bigg boss 8 show: ரசிகர்கள் எதிர்பார்த்த வைல்ட்கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள்.. அட இவங்கள்ளாம் தானா?

சென்னை: விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய எட்டாவது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற முழக்கத்துடன் நடிகர் விஜய் சேதுபதி அனைவரையும் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். அவரது வாரயிறுதி நிகழ்ச்சிகளை பார்க்க ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஏழு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இருந்த நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

television bigg boss tamil 8 vijay tv

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 6ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய ஆங்கராக விஜய் சேதுபதி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற பேச்சுடன் நிகழ்ச்சிக்கு புதிய அட்ராக்ஷனை கொடுத்து வருகிறார். தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அவர் அடுத்தடுத்து ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் போட்டியாளர்களை விளாசி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை அடுத்தடுத்து மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர். இந்நிலையில் இந்தவார எலிமினேஷனாக அன்ஷிதா நிகழ்ச்சியிலிருந்து நான்காவது போட்டியாளராக வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைல்ட் கார்ட் என்ட்ரி: இதனிடையே இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து 5 போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் என்ட்ரியாக இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் 5 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்ட்ரி நிகழ்ச்சிக்கு மேலும் அட்ராக்ஷனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னராக மாறினார்.

5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்: இந்நிலையில் அதே நடைமுறை தற்போது நடக்குமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தால் 19 போட்டியாளர்களாக மாறும். நடிகர் ராணவ், மாடல் வர்ஷினி வெங்கட், விஜய் டிவியின் டிஎஸ்கே, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போட்டியாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் ஆகியோர் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான சம்பவம்: அடுத்தடுத்த புதிய டாஸ்குகள், தலைவர் தேர்வு, நாமினேஷன், எலிமினேஷன் பிராசஸ் என ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். நிகழ்ச்சியின் சிறப்பான அட்ராக்ஷனாக நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.இன்றைய நிகழ்ச்சிக்கான பிரமோக்களும் வெளியாகியுள்ள நிலையில், இதில் பட்டு வேட்டி சட்டையில் நடிகர் விஜய் சேதுபதி காணப்படுகிறார். தீபாவளியை இணைத்து இன்றைய தினம் அவர் பேசியுள்ளார். இன்றும் சிறப்பான சம்பவம் காத்திருப்பதை இந்த பிரமோ வெளிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X