பிக்பாஸ் 8 ஷோவிலிருந்து வெளியேறிய தீபக் & அருண்.. நிகழ்ச்சியில் பங்கேற்க வாங்கிய சம்பள விவரம் இதோ!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து 7 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் புதிய ஹோஸ்ட் நடிகர் விஜய் சேதுபதியுடன் துவங்கியது.

தற்போது நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரமும் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில் தீபக் மற்றும் அருண் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

television bigg boss 8 tamil vijay tv

பிக்பாஸ் 8 தமிழ் ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த 7 சீசன்களிலும் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இருந்த கமல்ஹாசன் விலகிக் கொள்ள, கடந்த அக்டோபர் 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் புதிய ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார். அவரது பிரசென்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு புதிய உற்சாகத்தையும் கலரையும் கொடுத்துள்ளது. இருந்தபோதிலும் அவருக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஹோஸ்ட் விஜய் சேதுபதி: போட்டியாளர்களிடம் காட்டமாக பேசுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை விஜய் சேதுபதி சந்தித்து வருகிறார். இருந்தபோதிலும் அவரது ஹோஸ்ட்டிங்கை ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில் இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ராயன் வெற்றி பெற்று நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில், அடுத்ததாக தீபக், அருண், முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், விஜே விஷால், சவுந்தர்யா என 7 பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியிருந்தனர்.

இந்த வார எலினேஷன்: இந்நிலையில் இந்த வாரம் தீபக் மற்றும் அருண் எலிமினேட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சின்னத்திரையில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவரும் தீபக், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். அலட்டல் இல்லாத இவரது ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. பைனலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ளது ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாட இவர் ஒரு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையில் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீபக் & அருண் சம்பள விவரம்: இதனிடையே பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள சீரியல் நடிகர் அருணுடைய சம்பளம் குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இவர் தற்போது நிகழ்ச்சியின் இறுதிவரை விளையாடியுள்ள நிலையில், ஒரு நாளைக்கு இவருக்கு 20 முதல் 25 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருணை பிரமோட் செய்ய அவரது காதலியும் கடந்த சீசனின் டைட்டில் வின்னருமான அர்ச்சனா வெளியில் இருந்து ஆதரவாக செயல்பட்டு வந்தார். பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று அருணை சந்தித்தார். இந்நிலையில் அருண் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X