பட்டப்பகலில் சாலையில் மல்லுக்கட்டிய ஜிபி முத்து.. காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தைகளால் சண்டை!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. முன்னதாக டிக் டாக் மூலம் பிரபலமான இவரை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டுவந்தது. துவக்கத்தில் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட முனைந்த ஜிபி முத்து ஒரு கட்டத்தில் தன்னை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றுமாறு கேட்டார்.

இவர் நடத்திவரும் யூடியூப் சேனல்மூலம் இவர் மேலும் பிரபலமடைந்த நிலையில், அந்த சேனலில் வரும் இவரது வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்திய பிரபலத்தால் அடுத்தடுத்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரது பேச்சு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

television gp muthu bigg boss show

நடிகர் ஜிபி முத்து: டிக் டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஜிபி முத்து. இவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடினர். இவருக்கென தனியாக ஆர்மியெல்லாம் உருவாக்கப்பட்டது. இவர் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக சில தினங்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தன்னுடைய குடும்பத்தை பிரிந்து இருக்க முடியவில்லை என்று அதற்கு காரணம் சொன்னார். இதை புரிந்துக் கொண்ட கமல்ஹாசனும் இவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி: பிக்பாஸ் நிகழ்ச்சி ஜிபி முத்துவிற்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது. இவர் நடத்திவரும் யூடியூப் சேனலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவரது ட்ரேட் மார்க்காக செத்தப் பயலே, நாறப்பயலே என்ற வார்த்தைகள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இவருக்கு யூடியூப் மூலமாகவே மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் ஏறக்குறைய 15 லட்சம் மதிப்பிலான Kia காரை வாங்கியிருந்தார். இதன்மூலம் அனைவரும் தன்னை விமர்சித்து வருவதாகவும் குறைகொட்டிக் கொண்டார்.

ஆபாசமாக பேசிய ஜிபி முத்து: மிகவும் அதிரடியாக பேசிவரும் ஜிபி முத்து, உடன்குடியை சேர்ந்தவர். மரப்பொருள் வியாபாரம் செய்துவரும் இவருக்கு தூத்துக்குடியின் உடன்குடியின் வெங்கடாசலபுரத்தில் சொந்தமான அம்மன் கோயில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் மகேஷ் என்பவர் பூஜை செய்துவந்த நிலையில், நேற்று முன்தினம் புரட்டாசி பிறப்பையொட்டி மகேஷ் கோயிலில் பூஜை செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஜிபி முத்து, மகேஷ் இனிமேல் கோயிலில் பூஜை செய்யக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பட்டப்பகலில் கேட்கவே கூசும் வார்த்தைகளால் ஜிபி முத்து இப்படி பேசியது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

போலீசார் விசாரணை: இந்த சம்பவத்தில் குலசேகரன்பட்டினம் காவல்நிலைய போலீசாரிடம் மகேஷ் தரப்பினர் புகார் செய்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மிகவும் ஆவேசத்துடன் ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் ஆபாசமான வார்த்தைகளால் மகேஷை திட்டியுள்ளனர். காலை தூக்கிக்காட்டி ஜிபி முத்து கோபத்துடன் பேசியதையும் பார்க்க முடிந்தது. பிரபலமான யூடியூபர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜிபி முத்துவின் இந்த நடவடிக்கை அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X