பிக்பாஸ் 8 ஷோவோட பிரமோ சூட் துவங்கியாச்சு.. ஆங்கர் விஜய் சேதுபதியா.. சஸ்பென்சாவே வச்சிருக்காங்களே!

புதுச்சேரி: விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லான 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்ர 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இது இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய அட்ராக்ஷனாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய கமிட்மெண்ட்கள் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை அடுத்ததாக தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு யூகங்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சூர்யா, சரத்குமார், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இந்த பட்டியலில் உள்ளநிலையில் இதில் முதன்மை சாய்சில் விஜய் சேதுபதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

television vijay sethupathy

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் ஷோ. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விஜய் டிவிக்கு அதிகமான வருமானத்தை பெற்றுத் தரும் ஷோவாக காணப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கும் 150 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆயினும் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நிகழ்ச்சியின் அட்ராக்ஷன்களில் ஒன்றாக இருந்துவந்த கமல்ஹாசன், இந்த சீசனிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை தக்க வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

விலகிய கமல்ஹாசன்: இந்நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த புதிய சீசனில் யார் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்குவார்கள் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்கள் வலம்வந்துக் கொண்டிருக்கின்றன. நடிகர்கள் சரத்குமார், சூர்யா, நடிகை நயன்தாரா ஆகியோர் இந்த லிஸ்ட்டில் உள்ளனர். முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்புவின் பெயரும் அடிபட்ட நிலையில், இவர்களுக்கெல்லாம் முன்னால் இருப்பவர் விஜய் சேதுபதிதான். ஏறக்குறைய இவர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

துவங்கியது பிரமோ சூட்டிங்: இதனிடையே பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பிரமோவிற்கான சூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. எப்போதுமே இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் துவங்கப்படும். அதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்னதாக நிகழ்ச்சியின் பிரமோ வெளியாகும். அந்த வகையில் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் பிரமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பிரமோவில்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்து நாம் அறிந்துக் கொள்ள முடியும். அதுவரை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்த யூகங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.

பிரமோவிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்: இந்த பிரமோ மூலம் நிகழ்ச்சி எப்போது, எப்படி துவங்கும் என்பது குறித்தும் அறிந்துக் கொள்ள முடியும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார், யார் என்பது குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்ற நிலையில், அவர் இல்லாத பிக்பாஸ் சீசன் 8 எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதே கற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனிடையே, புதுச்சேரியில் பாண்டிராஜ் படத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதி, படத்தின் இடைவெளிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமோவிற்கான சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X