Singer Yugendran: பிக்பாஸ் பரபரப்பு.. யுகேந்திரன் செஞ்ச கூல் வேலை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 100 நாட்களை தொடர்ந்து நடந்துள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சி 105வது நாளில் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. மாலை 6 மணிக்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ் மற்றும் விஷ்ணு உள்ளனர். இவர்களில் அர்ச்சனா டைட்டிலை தட்டித் தூக்குவார் என்று பல்வேறு தரப்பினரும் கணித்துள்ளனர். ஆனால் மாயாதான் டைட்டில் வின்னர் என்றும் கூறப்படுகிறது.

அர்ச்சனா டைட்டிலை வெற்றிக் கொள்ளும்நிலையில், முதல்முறையாக பிக்பாஸ் டைட்டிலை வென்ற வைல்ட் கார்ட் போட்டியாளர் என்ற பெருமைக்கு உள்ளாவார். அடுத்தடுத்த ரன்னர் அப்பாக, மணி மற்றும் மாயாவும் 4வது இடத்தில் தினேஷ் மற்றும் ஐந்தாவது இடத்தில் விஷ்ணுவும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதுவாக இருந்தாலும் உறுதியான தகவலை பெற இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும். கடந்த 100 நாட்களை தாண்டி, ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay TVs Bigg boss tamil 7 contestant Yugendran started enjoying his day with his son

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் நிறைவடையவுள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டு பட்டது. மேலும் எலிமினேஷனும் முதல் வாரத்திலிருந்தே நடந்தது. மேலும் டபுள் எவிக்ஷன், மிட் வீக் எவிக்ஷன் என அடுத்தடுத்த முயற்சிகள் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டன.

பாடகர் யுகேந்திரன் போஸ்ட்: இதனிடையே வைல்ட் கார்ட் சுற்று மூலம் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா மற்றும் தினேஷ், இறுதிப் போட்டியாளர்களில் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக துவக்க போட்டியாளராக நிகழ்ச்சியில் களமிறங்கி, ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகரும் பிரபல பாடகருமான யுகேந்திரன். சில வாரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்த இவருக்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்றைய தினம் அனைவரும் பிக்பாஸ் பரபரப்பில் சிக்கியிருக்க யுகேந்திரன் தன்னுடைய மகனுடன் கூலான வேலையில் ஈடுபட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் உற்சாகம்: தன்னுடைய மகன் தர்ஷனுடன் இணைந்து அவர் நீச்சல் குளத்தில் தன்னுடைய காலையை கழித்துள்ளார். இதன் வீடியோவை வெளியிட்டுள்ள யுகேந்திரன், தன்னுடைய வாழ்க்கை, உலகம் மற்றும் எல்லாமுமான தர்ஷனுடன் தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பிக்பாஸ் 7 பைனல் போட்டிக்கு அவர் வரவில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில தினங்களாக முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில், அதிலும் யுகேந்திரன் மிஸ்ஸிங்.

எலிமினேட் போட்டியாளர்: முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற யுகேந்திரன், நிகழ்ச்சியில் கேப்டனாகவும் செயல்பட்டார். அப்போது அவர் தன்னுடைய குடும்பத்திற்கு வீடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார். தேவையான இடத்தில் தான் பேச வேண்டும் என்று நினைப்பதாகவும் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற தன்னுடைய நிலை, வெளியில் மற்றும் குடும்பத்தினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கேட்டிருந்தார். இந்த வீடியோ அந்த சமயத்தில் சிறப்பாக பார்க்கப்பட்டது. மேலும் யுகேந்திரன் எலிமினேஷனை தொடர்ந்து அவரது மனைவி ஹேமமாலினி பேசியதும் அதிகமான கவனத்தை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X