Bigg boss tamil 7: Ticket to Finale டாஸ்க்.. ஜெயிக்கும் 2 நபர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
சென்னை: விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 72வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது.
இன்றைய தினத்திற்கான பிரமோக்கள் வழக்கம்போல அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் டிக்கெட் டூ பைனல் சுற்று நடத்தப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் பரபரப்பாக பங்கேற்றதை பார்க்க முடிந்தது.
பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கும் மேல் இந்த நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடக்கவில்லை. இதனிடையே இந்த வாரத்தில் டபுள் எலிமினேஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
72வது நாளில் என்ட்ரி: இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 72வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்தில் நிக்சன் -அர்ச்சனா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. அர்ச்சனாவை பார்த்து கோபத்துடன் நிக்சன் சொருகிடுவேன் என்று கொந்தளிக்க, அதுகுறித்து அவரை கோபத்துடன் கண்டித்த கமல்ஹாசன், அவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்திருந்தார்.
ஓயாத நிக்சன் -அர்ச்சனா சண்டை: தொடர்ந்து அர்ச்சனாவையும் இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டித்தார். ஆனாலும் இவர்களது சண்டை ஓய்ந்தபாடியில்லை. நேற்றைய தினம் நிக்சனை இந்த வார எலிமினேஷனில் அர்ச்சனா நாமினேட் செய்தார். தொடர்ந்து இன்று வெளியான முதல் பிரமோவில் அர்ச்சனாவின் செயல்பாடுகள் குறித்து விஷ்ணுவிடம் நிக்சன் ஆதங்கப்படுவதாக அமைந்துள்ளது. அர்ச்சனா தன்னிடம் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
Ticket to finale டாஸ்க்: தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ஹுயூமன் கிளாக்காக மாறி நேரத்தை சரியாக ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பதே இந்த டாஸ்கிற்கான செயல்பாடாக இருந்தது. இதில் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டூ பைனலில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நொடியையும் கணக்கிட்டு போட்டியாளர்கள் நேரத்தை ரெக்கார்ட் செய்ததை இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.
டபுள் எலிமினேஷன்: இதில் ஹவுஸ்மேட்சுக்கு லைஃப்லைனும் வழங்கப்பட்டது. தற்போது 70 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளது. இதனிடையே தற்போது Ticket to finale டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் கூல் சுரேஷ் எலிமினேட் ஆவார் என்று கூறப்படுகிறது. ஆனால் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நபர் குறித்து கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











