Bigg boss tamil 7 show: சொருகிடுவேன்.. வலுக்கும் நிக்சன் -அர்ச்சனா சண்டை.. இதுகொஞ்சம் ஓவர்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றைய தினம் 67வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

மிக்ஜாம் புயலால் ரசிகர்கள் அதிகப்படியாக வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று பிக்பாஸ் 7 டீம் அறிவித்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 show december 7th 2023 episode promo released

இந்த வாரம் நிக்சன் எலிமினேட் ஆக அதிகப்படியான வாய்ப்புகள் இருந்த நிலையில் இதன்மூலம் அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனின் 67வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1ம் தே சிறப்பான துவக்க விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து இன்றைய தினம் 67வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. தொடர்ந்து 2 மாதங்களை நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரிக்களாக நுழைந்துள்ள அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பையும் வாக்குகளையும் பெற்று வருகின்றனர்.

7வது சீசனில் பிக்பாஸ் ஷோ: கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரசிகர்களை கவர்ந்து 6 சீசன்களை முடித்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் முதலே எலிமினேஷன் காணப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் ரசிகர்கள் வாக்களிக்க முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரசிகர்களை கவர்ந்த அர்ச்சனா: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, நிக்சன், மணி மற்றும் தினேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் நிக்சன்தான் எலிமினேட் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எலிமினேஷன் இல்லை என்பதால் அவர் இந்த வாரம் தப்பித்துள்ளார். இந்நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் நுழைந்த தினேஷ், அர்ச்சனா ஆகியோர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வாக்குகளையும் அதிகமாக பெற்று வருகின்றனர்.

வலுக்கும் நிக்சன் -அர்ச்சனா சண்டை: இதனால் துவக்க போட்டியாளராக களமிறங்கிய நிக்சன் உள்ளிட்டவர்கள் மிகுந்த கடுப்பில் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தொடர்ந்து அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருகட்டத்தில் இவர்களின் சண்டை பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்போது ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேவலமாக பேசிக் கொள்வதையும் இன்றைய பிரமோக்களில் பார்க்க முடிந்தது.

கேவலமாக பேசிய நிக்சன்: இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் அர்ச்சனா எதற்கும் லாயக்கில்லை என்று நிக்சன் கூற, ஒரு பெண்ணை பார்த்து இப்படி கேவலமாக எப்படி பேசலாம் என்று அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் பொண்ணா இது, வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்ததுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓடு என்பதாக நிக்சன் பேசுகிறார். அர்ச்சனா எதற்கெடுத்தாலும் அழுவதால் விலகிப் போவதாகவும் ஆனால் அவரைப் பார்த்து தான் பயப்படுவதாக அவர் நினைப்பதாகவும் அவர் கூறியதை பார்க்க முடிந்தது.

ரௌடித்தனம் செய்கிறாரா நிக்சன்?: மேலும் தான் கலாய்க்க ஆரம்பித்தால் அர்ச்சனா உட்கார்ந்து மூன்று நாட்களுக்கு அழுவார் என்றும் எச்சரிக்கிறார். கருமம் அது மூஞ்சியப் பாரேன் என்றும் சும்மா வினுஷா வினுஷா என்று தன்னை பேசுவதாக கூறும் நிக்சன் இறுதியில் சொருகிடுவேன் என்றும் கூறுவதாக தற்போதைய பிரமோவில் காணப்படுகிறது. பதிலுக்கு போடா என்று அர்ச்சனா கூறுவதாகவும் தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X