Bigg boss 7 show: 100வது எபிசோடில் பிக்பாஸ் 7 ஷோ.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஜோர்!
சென்னை: கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன், அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து இன்றைய தினம் 100வது எபிசோடில் என்ட்ரி ஆகியுள்ளது. வரும் 14ம் தேதி கிராண்ட் பைனல்சுடன் நிறைவு பெறவுள்ளதாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 100வது எபிசோடை எட்டியுள்ளது. இதையொட்டி நிகழ்ச்சியில் பல்வேறு கலர்ஃபுல் கலாட்டாக்கள் நடந்துள்ளன. இதன் பிரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
விஜய் டிவியின் சூப்பர்குட் நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை பூர்த்தி செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 7வது சீசனும் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இவரது தொகுப்பு நிகழ்ச்சிக்கு தனியாக அட்ராக்ஷனை கொடுத்துள்ளது. அவரது நிதானமான பேச்சு, போட்டியாளர்களின் குற்றங்களை அதீத கோபம் மற்றும் சாந்தமான சிந்தனையுடன் அவர் எதிர்கொள்வதும் நிகழ்ச்சியில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனாலும் சில சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கமல்ஹாசன் சந்தித்து வருகிறார்.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனையும் நிறைவு செய்யவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்றைய தினம் 100வது எபிசோடில் என்ட்ரி ஆகியுள்ளது. வரும் 14ம் தேதி பிரம்மாண்டமான பைனல்சும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் 7 நிகழ்ச்சி, அடுத்தடுத்து எலிமினேஷன், வைல்ட் கார்ட் என்ட்ரி என களைகட்டியது. தற்போது இறுதிப்போட்டிக்கு 6 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.
விசித்ரா எலிமினேஷன்: இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக கருதப்பட்ட விசித்ரா கடந்த வாரத்தில் குறைவான புள்ளிகளை பெற்று பிக்பாஸ் போட்டியிலிருந்து எலிமினேட் ஆனார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பிரதீப் எலிமினேஷன் போல விசித்ராவின் எலிமினேஷனும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் 100வது எபிசோடையொட்டி அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. இதில் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக எலிமினேட் ஆன அனன்யா, வினுஷா உள்ளிட்டவர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
100வது எபிசோட்: முன்னதாக வீட்டிற்குள் அதிகாலையிலேயே வந்த அனன்யா, மாயா மற்றும் அர்ச்சனாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் கேட்பதற்கு அதிகமான கேள்விகள் உள்ளதாகவும் ஆனால் அதை தான் கேட்க முடியாது என்றும் விஜய் வர்மா கூறியதை முன்னதாக வெளியான முதல் பிரமோவில் பார்க்க முடிந்தது. அவர் தன்னிடம் பேசவில்லை என்று விஷ்ணு அங்கலாய்க்க, குரூப் இல்லையென்றாலும் அதுஅது சேரும் இடத்தில் சென்று சேர்ந்துவிடும் என்று மணி அவருக்கு ஆறுதல் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதையடுத்து வெளியான இரண்டாவது பிரமோவில் முன்னதாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வினுஷா உள்ளிட்டவர்கள் காணப்பட்டனர். ஹாப்பி 100 டேஸ் என்ற வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சியில் என்ட்ரியான வினுஷா, விஷ்ணுவிடம் முயல் டாஸ்க் குறித்து பாராட்டினார். இதையடுத்து அதை கூறியது தான் என மணி வினுஷா முன்பு அப்பாவியாக என்ட்ரி கொடுக்கிறார். தொடர்ந்து வினுஷாவிடம் தம்பி பேசினாரா என்று தினேஷ் கேட்க, 70 கேமிரா முன்பு பேசியதாக வினுஷா பதில் கூறுவதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











