Bigg Boss 7 Finals: பிக்பாஸ் கிராண்ட் பைனல் இன்று மாலை.. கெத்தாக அறிவித்த உலகநாயகன்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஷோ, இன்றைய தினம் 105வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இதையொட்டிய பிரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்பான கலைநிகழ்ச்சிகளுடன் எண்ட் கார்ட் போடவுள்ளதை இந்த பிரமோக்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிகழ்ச்சியின் இன்றைய பைனல்ஸ் குறித்து இந்த பிரமோக்களில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கடந்த 105 நாட்களாக ரசிகர்களை கவர்ந்துவந்த இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இன்றைய தினம் 7வது சீசனையும் நிறைவு செய்யவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளர்களாக 18 பேர் இருந்தனர். தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்ட 7 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனதும் நிகழ்ச்சி களைகட்டியது. தொடர்ந்து அர்ச்சனா மற்றும் தினேஷின் ஆதிக்கம் நிகழ்ச்சியில் அதிகரித்தது. தற்போது அர்ச்சனா பைனல் போட்டியாளராகவும் களமிறங்கியுள்ளார். அவர்தான் டைட்டில் வின்னர் என்று கூறப்பட்டுள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 show going to end today with grand finale

பிக்பாஸ் 7 ஷோ: கடந்த 2017ம் ஆண்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான ஷோவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் இந்த நிகழ்ச்சியோடு இணைந்து தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகர் கமல்ஹாசன், தற்போது 7வது சீசனிலும் அதை தொடர்ந்து வருகிறார். இன்றைய தினம் 105வது நாளில் நிகழ்ச்சி என்ட்ரி ஆகியுள்ளது. இன்று மாலை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக அடுத்தடுத்த பிரமோக்களில் கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், இதை பிரமோக்களின்மூலம் ரசிகர்களிடையே கூறி வருகிறார்.

Vijay TVs Bigg boss tamil 7 show going to end today with grand finale

105வது நாளில் என்ட்ரி: கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இதுகுறித்து இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் நீண்ட ஒரு பயணத்தின் இறுதிக்கட்டம் என்று பேசியுள்ளார். விறுப்பு, வெறுப்பு என்று வாராவாரம் மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தது பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல என்றும் பார்வையாளர்களும்கூட என்பதை எடுத்துக் காட்டினார். கற்ற சந்தோஷம் போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும்தான் என்று கூறிய கமல், பைனல்ஸ் குறித்தும் பேசியுள்ளார்.

அடுத்தடுத்த பிரமோக்கள்: தொடர்ந்து வெளியான அடுத்த பிரமோவில் போட்டியாளர்கள் 5 பேரும் மிகவும் கிராண்டான உடையுடன் நிகழ்ச்சியில் இணைந்ததை பார்க்க முடிந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் குறித்தும் இந்த பிரமோவில் காட்டப்பட்டிருந்தது. விசித்ரா, ரவீனா, கூல் சரேஷ் உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டனர். இந்த பிரமோவிலும் இன்று மாலை நடைபெறவுள்ள பிக்பாஸ் கிராண்ட் பைனல் குறித்து கமல் பேசினார். தொடர்ந்து அடுத்த பிரமோவில் 23 போட்டியாளர்கள், 106 நாட்கள், 60 கேமராக்கள், பல கோடி கண்கள் என நிகழ்ச்சிக்கான விஷயங்களை அடுக்கிய கமல் மீண்டும் பைனல்ஸ் குறித்து பேசினார்

Vijay TVs Bigg boss tamil 7 show going to end today with grand finale

பாடலுடன் என்ட்ரியான கமல்: முன்னதாக நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு தனியாக பாடல்கள் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன், உலக சினிமாவில் விற்க முடியாத தங்க மண்ணு என்று அவருக்கு பாராட்டுடன் பாடல் பாடப்பட்டது. இதுகுறித்து நிகழ்ச்சியின் 4வது பிரமோவில் பார்க்க முடிந்தது. இந்த வரவேற்பை தொடாந்து நிகழ்ச்சியில் கெத்தாக நுழைந்த கமல்ஹாசன், இறுதிப்போட்டியை கெத்தாகவும் நடத்தினார். நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் என்று கூறப்படும் நிலையில், இன்று மாலை வெளியாகும் இறுதிப்போட்டியில் இதுகுறித்து தெரியவரும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X