Big boss 7: மற்றவர் திருமணத்திற்கு நாம் கவுன்சிலர் ஆக முடியாது.. விசித்ராவை வெளுத்து வாங்கிய கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 91வது நாளை எட்டியுள்ளது. வாரயிறுதி எபிசோடான நேற்றும் இன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக அரங்கேறிய பல பிரச்சினைகள் குறித்து பேசினார். குறிப்பிட்ட போட்டியாளரிடம் கேள்விகளையும் அடுக்கினார். இதனால் நிகழ்ச்சி களைகட்டியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தினேஷின் சொந்த வாழ்க்கை குறித்து விசித்ரா பேசியதையும் கேள்வி கேட்டார்.
விசித்ரா மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த தினேஷ் இருவருக்கும் துவக்கம் முதலே அதிகமான போட்டி, சண்டைகள் இருந்து வந்தது. விசித்ராவின் அனைத்து செயல்பாடுகள் குறித்தும் தினேஷ் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் விசித்ரா கடுப்பாகி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது திருமண வாழ்க்கை குறித்து விசித்ரா திட்டி பேசியது ரசிகர்களை அருவருக்க செய்தது. அவரது இந்த பேச்சுக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் கையில் எடுத்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ள நிலையில் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் உள்ளிட்ட டாஸ்க்குகள் நடந்து வருகின்றன. இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் பல விஷயங்கள் நிகழ்ச்சியில் நடந்து வருகின்றன. அந்த வகையில் தினேஷின் சொந்த வாழ்க்கை குறித்து விசித்ரா பேசியது நிகழ்ச்சியில் பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் -ரச்சிதா திருமண வாழ்க்கை குறித்து விசித்ரா கோபத்துடன் பேசியுள்ளார்.
வாரயிறுதி எபிசோட்: இந்நிலையில் வாரயிறுதி நாளான இன்றைய தினம் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் விசித்ராவை வறுத்தெடுத்துவிட்டார். நிகழ்ச்சியின் 91வது நாளான இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் விசித்ராவை கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் விசித்ரா மேம் என ரவீனா அழைப்பதை போலவே அழைத்த கமல்ஹாசன், அவர் கேமராவிற்காக பேசுவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து விசித்ரா ஆச்சர்யம் அடைந்ததையும் இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது.
விசித்ராவை வறுத்தெடுத்த கமல்: மற்றவர் பர்சனல் லைஃப் குறித்து பேசுவதை கமல் கேள்வி கேட்க முதலில் அதை ஒப்புக் கொள்ளாத விசித்ரா தொடர்ந்து ஒப்புக் கொண்டார். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறிய கமல்ஹாசன், மற்றவர்கள் திருமணத்திற்கு நாம் கவுன்சிலர் ஆக முடியாது என்று காட்டமாக குறிப்பிட்டதை இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது. இந்தப் பிரமோவில் கமலின் அடுத்தடுத்த கேள்விகளின்போது தினேஷ் வருத்தத்துடன் காணப்பட்டதையும் காண முடிந்தது. இதையடுத்து வெளியான 3வது பிரமோவில் இந்த வாரம் 2 எவிக்ஷன் என்பதையும் கமல் தெளிவுப்படுத்தியுள்ளார்.
புத்தாண்டு தீர்மானம் குறித்து கேள்வி: முன்னதாக வெளியான முதல் பிரமோவில் புத்தாண்டையொட்டி ஹவுஸ்மேட்ஸ் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். மேலும் இந்த நியூ இயருக்கான தீர்மானங்களாக ஹவுஸ்மேட்ஸ்கள், மற்ற இரு போட்டியாளர்களுக்கு கூற விரும்புவது குறித்து கமல் கேட்டார். இதில் பல சுவாரஸ்யங்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் கோபத்தை தணிப்பதற்கான வழிமுறையையும் கமல்ஹாசன் பேசியதை முதல் பிரமோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











