Bigg boss tamil 7: பேசறதுக்கு நிறைய இருக்கு.. கெஞ்சிய ரவீனா.. கோபப்பட்ட மணி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் எண்ட்கார்ட் போடவுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நாளை மறுநாள் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில் தற்போது நிகழ்ச்சியில் முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இருந்து போன நிலையிலும் சில பிரச்சினைகளை விட்டு சென்ற அவர்கள், அதை தற்போது வெளியில் பேசி வருகின்றனர்.

இன்னும் இரு தினங்களில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நிறைவுறவுள்ள நிலையில் இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ் மற்றும் விஷ்ணு உள்ளனர். இன்னும் இரு தினங்களில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்த 7வது சீசனில் யார் டைட்டிலை வெற்றி கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாபக நுழைந்த அர்ச்சனாதான் டைட்டிலை வெற்றி கொள்வார் என்று கூறப்படும் நிலையில், இதுகுறித்து இன்னும் இரு தினங்களில் ரசிகர்களுக்கு தெரியவரும்.

Vijay TVs Bigg boss tamil 7 show todays (12th January 2024) episode 3rd promo

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப்போட்டியாளர்களாக 5 பேர் நிகழ்ச்சியில் உள்ளனர். இவர்களில் டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார் என்ற அதீதமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் தற்போது முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

மணி -ரவீனா நட்பு: இந்த நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் மணியின் நட்பு குறித்து பரவலான பல கருத்துக்கள் இருந்தன. இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரீஸ் டாஸ்க்கில் ரவீனாவின் விளையாட்டு மணியால் தான் கெடுவதாக ரவீனாவின் அம்மா குற்றம் சாட்டியிருந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ரவீனாவை சுயமாக முடிவெடுக்க விடாமல் மணி தடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரவீனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் மணி இறுதிப்போட்டியாளராகியுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் நிகழ்ச்சி: தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியில் தற்போது என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ரவீனா, மணியை ஆசையாக சென்று சந்திக்கிறார். தன்னை ஏன் அவாய்ட் செய்கிறீர்கள் என்று அவர் கேட்க, தனக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான் என்று கோபத்துடன் மணி பேசுகிறார். இதுகுறித்து இன்றைய தினத்திற்கான 3வது பிரமோவில் பார்க்க முடிகிறது. இல்லாத விஷயத்தை தான் எப்படி கொண்டுவர முடியும் என்றும் மணி கேள்வி கேட்கிறார்.

மணியிடம் கெஞ்சிய ரவீனா: தொடர்ந்து தப்போ ரைட்டோ, செட் ஆகவில்லை என்றால் தான் ஒட்டவே மாட்டேன் என்றும் மணி கூற, எல்லாவற்றையும் மறந்துவிடுமாறு ரவீனா மணியிடம் கெஞ்சுவதாகவும் பிரமோவில் காணப்படுகிறது. வெளியில் போய் பேசுவதற்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் ஏக்கத்துடன் பேசுகிறார். உடனே அங்கிருந்து கோபத்துடன் மணி எழுந்து போவதாகவும் பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ வெளியாகியுள்ள நிலையில், மணி எப்போதும் தன்னுடைய வழியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக வெளியில் நடக்கும் விஷயங்கள் குறித்தும் ரவீனா பேசினார். இதையும் மணி எச்சரித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X