Bigg boss tamil 7: வீட்டோட குயின்.. விசித்ரா கணவரின் மாஸ் என்ட்ரி.. நம்பாமல் பார்த்த விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 82வது நாளில் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதையொட்டி போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர்கள் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

Vijay TVs bigg boss tamil 7 show: Vichitra family entered Bigg boss house

கடந்த சில தினங்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வந்த நிலையில், விசித்ராவின் வீட்டினர் வராததால் அவர் மிகவும் ஏக்கத்திற்கு உள்ளானார்.

நடிகை விசித்ரா: சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வலம் வந்தவர் விசித்ரா. முத்து உள்ளிட்ட பல படங்களில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. தற்போது விறுவிறுப்பாக நடந்துவரும் பிக்பாஸ் தமிழ் 7 சீசனில் முக்கியமான போட்டியாளராக விசித்ரா காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் நுழைந்த 18 துவக்க போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்து மாஸ் காட்டி வருகிறார். முதல் வாரத்திலேயே ஜோவிகாவின் கல்வி குறித்து பேசி, அதை விவாதத்திற்கு உள்ளாக்கினார். அடிப்படை கல்வியின் அவசியத்தை பேசி அனைவரையும் கவர்ந்தார்.

வெளிப்படையாக பேசும் விசித்ரா: கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் தொடர்ந்து போட்டியாளர்களிடையே மோதல்கள், பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள், விவாதங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இத்தகைய சர்ச்சைகளில் அதிகமாக விசித்ரா காணப்படுகிறார். தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் தைரியமாக பேசும் அவரது நடவடிக்கைகள் அதிகமானவர்களை ஈர்த்தாலும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. சினிமாவில் தான் சந்தித்த பல விஷயங்களையும் விசித்ரா வெளிப்படையாக பேசினார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

துவக்க போட்டியாளர் விசித்ரா: விசித்ரா துவக்க போட்டியாளராக களத்தில் இறங்கிய நிலையில், சில நாட்கள்கூட தாக்கு பிடிக்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 82வது நாளில் இன்றைய தினம் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அசராமல் தன்னுடைய போட்டியை எதிர்கொண்டு வருகிறார். இந்த வாரம் இவர் நாமினேட் செய்யப்பட்டாலும் இவர் எலிமினேட் ஆக மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் விசித்ரா குடும்பத்தினர்: கடந்த 82 நாட்களாக தன்னுடைய குடும்பத்தினரை சந்திக்காமல் இருந்த விசித்ரா, மற்றவர்களின் பெற்றோர் உள்ளிட்டவர்களை சந்தித்த நிலையில் தன்னுடைய குடும்பத்தினரை மிகவும் மிஸ் செய்தார். அவர் ஏக்கத்துடன் காணப்பட்டதை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் விசித்ராவின் கணவர் ஷாஜி மற்றும் மகன்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பிரமோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் காண முடிந்தது. அழகான பாடல் இசைக்க, பிக்பாஸ் வீட்டில் ஷாஜி என்ட்ரி கொடுக்க, அவரை பார்த்ததும் விசித்ரா கட்டியணைத்து கதறி அழுததை பார்க்க முடிந்தது.


வீட்டின் குயின் என விசித்ரா கணவர் பாராட்டு: தொடர்ந்து தன்னுடைய வீட்டின் குயின் என்று ஷாஜி, விசித்ராவை ஹவுஸ்மேட்சிற்கு அறிமுகம் செய்கிறார். இதையடுத்து தன்னுடைய மகன்கள் குறித்து விசித்ரா கேள்வி எழுப்ப, அவர்களுக்கு பரிட்சை நடப்பதால் அவர்கள் வரவில்லை என்று அவரது கணவர் கூறுகிறார். இதனால் விசித்ரா அவரை நம்பாமல் பார்த்ததையும் அப்செட் ஆனதையும் பார்க்க முடிந்தது. தான் வந்ததால் மகிழ்ச்சி அடையாமல் குழந்தைகள் குறித்து அவர் கேட்பதை ஷாஜி கேள்வி கேட்டார். தொடர்ந்து விசித்ராவின் மகன்கள் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க, உணர்ச்சிவசப்பட்ட விசித்ரா நொருங்கி அழுததையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X