Bigg boss tamil 7 show: கோபத்தை தூண்டும் அர்ச்சனா, தினேஷ்.. கமல் கேள்விக்கு நிக்சன் பதில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது.
இந்த நிகழ்ச்சி 70வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

வாரயிறுதி எபிசோடில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார்.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7வது முறையாக கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் அதிலிருந்து கமல்ஹாசன் விலகினார். சூட்டிங் உள்ளிட்டவற்றை காரணமாக அவர் கூறிய நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
70வது எபிசோட்: இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் 70வது எபிசோடில் என்ட்ரி கொடுத்துள்ளது. வாரயிறுதி எபிசோடான நேற்றும் இன்றும் நிகழ்ச்சியில் தோன்றிய நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிகழ்வுகளை கேள்விக்குள்ளாக்கினார். போட்டியாளர்கள் தரம்கெட்டு விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.
நிக்சன் -அர்ச்சனா விவகாரம்: கடந்த வாரத்தில் நிக்சன் மற்றும் அர்ச்சனா விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நிக்சனுக்கு ஸ்டிரைக் கார்ட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். தொடர்ந்து வினுஷா விவகாரத்தை எடுத்தது ஏன் என்று அர்ச்சனாவிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த செயல் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளது. நிக்சனின் செயல்பாடுகளுக்கான விளக்கத்தை அவர் கேட்ட நிலையில், இந்த வாய்ப்பை முன்னதாக பிரதீப்பிற்கு அவர் வழங்காதது ஏன் என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
அடுத்தடுத்த பிரமோக்கள்: இதனிடையே இன்றைய தினம் நிகழ்ச்சியின் 70வது எபிசோடுக்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் பிரமோவில் பேசிய கமல்ஹாசன் நிகழ்ச்சியில் என்டர்டெயின்மெண்ட் இல்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து போட்டியாளர்கள் வன்ம போதையில் ஈடுபட்டு ஒருவரையொருவர் மதிப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டினார். முட்டாளுக்கு முட்டை என்று வன்மத்தை கக்கினால் எப்படி என்டர்டெயின்மெண்ட் வரும் என்றும் கேள்வி எழுப்பினார்.
வெற்றிக்கு தடையான போட்டியாளர்கள்: தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் போட்டியாளர்களின் வெற்றிக்கு தடையாக இருக்கும் நபரை சுட்டிக் காட்ட கேட்டுக் கொண்டார். இதில் முதலில் பேசிய விக்ரம் அர்ச்சனாவை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய நிக்சன், கோபம்தான் தன்னுடைய வெற்றிக்கு தடையாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து அந்தக் கோபத்தை தினேஷ் மற்றும் அர்ச்சனா தூண்டி விடுவதாகவும் தெரிவித்தார்.
அர்ச்சனாவின் வெற்றிக்கு தடை: மாயா அர்ச்சனாவை சுட்டிக் காட்ட அனன்யா தினேஷை குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அர்ச்சனா தன்னுடைய வெற்றிக்கு தடையாக தானே இருப்பதாக கூறுகிறார். விஷ்ணு கோபம்தான் தனக்கு தடை என்று கூற, பூர்ணிமா விஷ்ணுவை கைக்காட்டுகிறார். இதனால் விஷ்ணுவின் முகம் சுருங்கிப் போவதையும் இந்த பிரமோவில் பார்க்க முடிகிறது. வாரயிறுதி எபிசோட்களான நேற்றும் இன்றும் தொடர்ந்து போட்டியாளர்களின் பல நெகட்டிவ்களை கமல் சுட்டிக் காட்டியதை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











