Bigg boss tamil 7: நீங்க சொன்ன வார்த்தை.. தாங்க முடியாத அடி.. அர்ச்சனாவிடம் எமோஷனலான மாயா!
சென்னை: விஜய் டிவியின் மாஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு இன்றைய தினம் 102வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்னும் இரு தினங்களில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான இறுதி நிகழ்ச்சியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 7வது சீசனிலும் தொடர்ந்து ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவருடைய இந்த பங்களிப்பு நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அட்ராக்ஷனை கொடுத்து வருகிறது. இந்த சீசனில் அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. தொடர்ந்து வித்தியாசமான டாஸ்க்குகள், அதிரடி சண்டைகள், வாக்குவாதங்கள் என நிகழ்ச்சி களைகட்டி வந்த நிலையில் முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகளை பெற்று அனன்யா எலிமினேட் ஆனார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் ஆனதும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 7 போட்டியாளர்கள் உள்நுழைந்ததும் நடந்தது. நிகழ்ச்சியில் சில தினங்களிலேயே எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறினார். பிரதீபிப்பின் எலிமினேஷன் தற்போது வரை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக 7வது சீசன்வரை வந்துள்ளது பிக்பாஸ். இன்னும் இரு தினங்களில் என்ட் கார்ட் போடவுள்ளது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி. கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். கடந்த 6 சீசன்களையும் தன்னுடைய நிதானமான மற்றும் அழுத்தமான செயல்பாடுகளால் களைகட்ட செய்த கமல்ஹாசன் இந்த சீசனிலும் அதை தொடர்ந்து வருகிறார். வாரயிறுதி எபிசோட்களில் அவர் நிகழ்ச்சியில் தோன்றி அந்தந்த வாரத்திற்கான நிகழ்வுகளின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவதாக காணப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன்: இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய நிதானமான மற்றும் அழுத்தமான செயல்பாடுகளால் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். இருந்தபோதிலும் விமர்சனங்களையும் அவர் சந்திக்க தவறுவதில்லை. இந்த சீசனில் பிரதீப் எலிமினேஷன் குறித்த கமல்ஹாசனின் முடிவு மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதேபோல அவர் மாயாவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய் வர்மாவிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் மீண்டும் நிகழ்ச்சியில் ஆஜரானார். இதேபோல பிரதீப்பும் மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.
102வது நாளில் என்ட்ரி: இந்நிலையில் நிகழ்ச்சி இன்றைய தினம் 102வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவுறவுள்ளது. தற்போது நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் இறுதிப்போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது கடந்த வாரங்களில் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் என்ட்ரி ஆகி, இறுதிப்போட்டியாளர்களுடன் தங்களது கோபங்கள், ஆதங்கங்கள் உள்ளிட்டவற்றை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இதையொட்டி இறுதிப்போட்டியாளர்களிடையே பிரச்சினைகள் ஏற்படுவதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிகிறது.
அடுத்தடுத்த பிரமோக்கள்: அந்த வகையில் இன்று வெளியான முதல் பிரமோவில் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆன ஜோவிகா, தினேஷ் தனிப்பட்ட பிளேயராக சொல்வதற்கு எதுவும் இல்லை என்று சுட்டிக் காட்டினார். தொடர்ந்து மாயாவிடம் பேசிய ஜோவிகா, அர்ச்சனா மற்ற போட்டியாளர்களை எப்படியெல்லாம் பேசினார், ஆனால் மாயா தற்போது அவருடன் உறவாடுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து மாயா இந்த சீசனில் இல்லையென்றால், இந்த சீசனே வேஸ்ட் என்றும் சுட்டிக் காட்டிவதாக முதல் பிரமோவில் காட்டட்பபட்டுள்ளது. தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் அர்ச்சனாவிடம் மாயா சண்டையிடுவதாக காட்டப்படுகிறது.
அர்ச்சனாவை குற்றம் சாட்டிய மாயா: மாயாவிடம் முதலில் பேசும் அர்ச்சனா, அவரின் அன்பை தான் உணர்வதாகவும் அவரை மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறார். தொடர்ந்து அவருக்கு பதிலளிக்கும் மாயா, அவரை நம்ப முடியாது என்று குறிப்பிடுகிறார். தன்னால் நம்பும்படி நடிக்கக்கூட முடியாது என்று கூறும் மாயா, தான் ஒரு சமயத்தில் அதிர்ச்சியடைந்ததாக கூறிய நிலையில், சார் இவங்களுக்கு அதிர்ச்சியா, அதெல்லாம் கிடையாது சார், நமக்கு அதிர்ச்சி கொடுக்காமல் விட மாட்டார்கள் என்று கூறியது தனக்கு தாங்க முடியாத அடி என்றும் மாயா வெளிப்படுத்தினார்.
மாயா ஆதங்கம்: அந்த சம்பவத்திற்கு பிறகு தனக்கு வெளியில் கிடைத்த சப்போர்ட்டில் கூட அடி என்று கூறிய மாயா, அர்ச்சனா எங்கேயோ இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த நேரத்தில் அர்ச்சனா கேட்ட கேள்வியால் தன்னுடைய நம்பிக்கை குறைந்ததாகவும் மாயா தெரிவித்தார். நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக நிகழ்ச்சியின் எலிமினேஷன் போட்டியாளர்கள் அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து முன்னதாக நடந்த பல்வேறு விஷயங்களை, எடுத்து பேசியது நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கும் ஒரு ரிவைண்ட் போல இருந்தது.


Click it and Unblock the Notifications











