Bigg boss tamil 7: சாரி செல்லாது.. மன்னிப்பு கேட்ட நிக்சனுக்கு வினுஷா பதிலடி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் உள்ளது. நாளை மறுநாள் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான இறுதிச்சுற்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் நிக்சன், வினுஷா, ஜோவிகா உள்ளிட்டவர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர். மேலும் முன்னதாக ஏற்பட்ட சில மனக்கசப்புகள் உள்ளிட்டவற்றை தீர்க்கவும் புதிதாக சில பஞ்சாயத்துக்களை துவக்கவும் செய்துள்ளனர். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சி மேலும் களைக்கட்டி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய 7வது சீசன். இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். நாளை மறுதினம் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இன்றைய தினம் நிகழ்ச்சி 103வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் தற்போது நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ளனர்.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (12th January 2024) episode promos

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு இன்றைய தினம் 103வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. நாளை மறுதினம் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான இறுதிச்சுற்றுடன் நிறைவடையவுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் தற்போது நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் என்ட்ரி: இதனால் நிகழ்ச்சியில் முன்னதாக நிகழ்ந்த பல பிரச்சினைகள் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் தலைதூக்கியுள்ளது. சிலர், அப்போது வெளிக்காட்ட முடியாத தங்களுடைய கோபங்களையும் வருத்தங்களையும் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இன்றைய தினத்திற்கான முதல் பிரமோவில் கூல் சுரேஷ், விசித்ரா, விஜய் வர்மா, நிக்சன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததை பார்க்க முடிகிறது. இதையடுத்து கூல் சுரேஷ், அந்தந்த குரூப்பெல்லாம் தனியாக பிரிந்து செல்லுங்கள் என்று கூலாக சொன்னதை பார்க்க முடிந்தது.

வினுஷாவிடம் மன்னிப்பு கேட்ட நிக்சன்: விசித்ரா, நிக்சன் உள்ளிட்டவர்களும் வெளியில் சென்ற பின்பு தங்களுடைய அனுபவங்களை கூறியதையும் இந்த பிரமோ மூலம் காண முடிந்தது. இதையடுத்து வெளியான இரண்டாவது பிரமோவில் நிகழ்ச்சிக்கு வந்த வினுஷாவிடம் நிக்சன் மன்னிப்பு கேட்டதை பார்க்க முடிந்தது. ஐசுவிடம் வினுஷா குறித்து பேசியபொழுது அது தவறாக தனக்கு தெரியவில்லை என்றும் அதை வைத்து உள்ளே நிகழ்ந்ததை காட்டிலும் தற்போது வெளியில் மிகவும் அதிகமாக செய்யப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் அதற்காக வினுஷாவிடம் சாரி கேட்டார்.

மன்னிப்பை ஏற்காத வினுஷா: ஆனால் அவரது மன்னிப்பை ஏற்காத வினுஷா, அவர் பேசியது தவறு என்று தெரிந்துவிட்டதாகவும் அவர் அந்த இடத்தில் சரியாக மன்னிப்பு கேட்காததால் வெளியில் தவறாக போயுள்ளது, அது தன்னை துன்புறுத்தியது என்பதற்காக நிக்சன் சாரி கேட்க வேண்டாம் என்றும் அந்த சாரி செல்லாது என்றும் வினுஷா கட் அண்ட் ரைட்டாக பேசியது இரண்டாவது பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நிக்சன், திரும்ப திரும்ப அவர் தன்னுடைய நடவடிக்கையை குறிப்பிடுவதாக தனக்கு தோன்றுகிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X