Bigg boss tamil 7: ஆட்டம் பாட்டத்துடன் விடை பெற்ற போட்டியாளர்கள்.. நெகிழ்ச்சித் தருணம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 இன்றைய தினம் 104வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ள நிலையில் நாளைய தினம் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, விஷ்ணு, தினேஷ், மணி ஆகியோர் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக நிகழ்ச்சியின் ஹைலைட்டாக முன்னதாக எலிமினேட் ஆன போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் இருந்தபோது நடந்த பல விஷயங்களை இந்த இரு தினங்களில் மீண்டும் போட்டியாளர்கள் இணைந்து ரிவைண்ட் செய்ததை பார்க்க முடிந்தது. தற்போது நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று போட்டியாளர்களில் மாயா மற்றும் அர்ச்சனா என இரு பெண் போட்டியாளர்கள் உள்ள நிலையில், அவர்கள் சுமூகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜோவிகா, மாயாவிடம் இதுகுறித்து கொளுத்திப் போட்டார். இதையடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவிடம் மீண்டும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அர்ச்சனாவிடம் அவர் முன்னதாக நடந்துக் கொண்ட விதம் குறித்து மாயா கோபப்பட்டார்.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (13th January 2024) episode promos

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ், 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்கி 100 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிலையில், இன்றைய தினம் நிகழ்ச்சி 104வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. நாளை மாலை இந்த நிகழ்ச்சி சிறப்பான இறுதிச்சுற்றுடன் நிறைவடையவுள்ளது. நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் உள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டைட்டில் வின்னர்?: இதில் அர்ச்சனாதான் வின்னர் என்று பலதரப்பினரும் கணித்துள்ளனர். அதற்கேற்ப அவருக்கு அதிகமான சப்போர்ட் காணப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை மாயா பிடிப்பார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் டைட்டிலை வெற்றிக் கொண்டு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை யார் தட்டித் தூக்குவார்கள் என்பது நாளைய தினம் தெரியவந்துவிடும். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் கடந்த இரு தினங்களாக நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தனர்.

எலிமினேட்டான போட்டியாளர்கள்: முன்னதாக போட்டியாளர்களிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள், பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் என அனைத்தும் தற்போது மீண்டும் நிகழ்ச்சியில் தோன்றியதை கடந்த இரு தினங்களில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இவ்வாறு என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் 13 பேரும் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். முன்னதாக நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் உடைந்து அவர்களை தேடிய தருணங்களின் சிறு தொகுப்பை முதல் பிரமோவில் பார்க்க முடிந்தது. பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோரின் எமோஷனல் தருணங்களை இந்த வீடியோ வெளிக்காட்டியது.

விடைபெற்ற போட்டியாளர்கள்: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அடுத்த பிரமோவில் கடந்த இரு தினங்களாக நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த எலிமினேட் ஆன போட்டியாளர்கள் விடைப்பெற்றனர். அவர்கள் மற்றும் இறுதிச்சுற்று போட்டியாளர்கள் எமோஷனலாக கட்டித் தழுவி தங்களது நெகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். மாயா -பூர்ணிமா, மணி -ரவீனா, பூர்ணிமா -விஷ்ணு என போட்டியாளர்கள் அனைவரும் கட்டியணைத்து தங்களது அன்பை பகிர்ந்துக் கொண்டனர். தொடர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் போட்டியாளர்கள் விடை பெற்றதாக இரண்டாவது பிரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X