Bigg boss tamil 7: ரவீனாவை திட்டிய தோழியின் அம்மா.. வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 7வது சீசனிலும் களைகட்டி வருகிறது பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு இன்றைய தினம் 81வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பங்கேற்று வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்சசியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டு இன்றைய தினம் 81வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் அடுத்தப் போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 7 பேர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நிலையில் நிகழ்ச்சி அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
வித்தியாசம் காட்டும் சீசன்: கடந்த சீசன்களில் இருந்து மாறுபட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த சீசனில் பார்க்க முடிகிறது. துவக்கத்திலேயே இரு வீடுகள் என்ற அறிவிப்புடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இருவேறு வீடுகளில் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து டபுள் எவிக்ஷன், மிட் வீக் எவிக்ஷன் என அடுத்தடுத்த புதிய விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது 12 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.
ஃபிரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் 7: இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அதிகமாக எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதையொட்டி போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருகை தந்து வருகின்றனர். இதனால் அவர்களின் கோபதாபங்களை போட்டியாளர்கள் எதிர்கொண்டனர். இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் பூர்ணிமா உள்ளிட்டவர்களின் மிகவும் நெகிழ்ச்சியாக தங்களது பெற்றோரை எதிர்கொண்டதையும் பார்க்க முடிந்தது.
81வது நாளில் என்ட்ரி: இதனிடையே இன்றைய 81வது எபிசோடிற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மணி மற்றும் ரவீனா நட்பு தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ரவீனா மற்றும் மணியிடம் இதுகுறித்து ரவீனாவின் பிரண்ட் அம்மா சற்று கோபத்துடன் பேசியதை பார்க்க முடிந்தது. இதற்காகவா இந்த நிகழ்ச்சிக்கு வந்தாய் என்று ரவீனாவிடம் அவர் கடிந்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. ரவீனாவின் அம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ரவீனா -மணியிடம் கோபம் இனிமேல் ரவீனாவை தனியாக அழைத்து பேச வேண்டாம் என்று மணியிடமும் அவர் கோபத்துடன் பேசினார். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ரவீனா மற்றும் அவரது தோழியின் அம்மா இருவரும் கோட் வார்த்தைகளை பயன்படுத்துவதாக அமைந்துள்ளது. இதையடுத்து வெளியுலக தகவல்களை கூறியதாலும் கோட் வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் ரவீனாவின் தோழியின் அம்மாவை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார்.
ரவீனா தோழி அம்மாவை வெளியேற்றிய பிக்பாஸ்: இதனால் அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றனர். இதனிடையே, தன்னுடைய தோழியின் அம்மா வெளியேறுவது குறித்து, பிக்பாசிடம் ரவீனா கோரிக்கை விடுக்கிறார். தொடர்ந்து அவர் கதறி அழுததையும் மணி இதை பார்த்து செய்வதறியாமல் திகைப்பதாகவும் தற்போதைய பிரமோ அமைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஃபிரீஸ் டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் பெற்றோர், தங்களது ஆதங்கங்கள், மகிழ்ச்சி, வேதனை உள்ட்டவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











