Bigg boss tamil 7: இப்படி ஒரு கப் வாங்கனும்னா அசிங்கப்படனும்.. மாயாவை கடுப்பாக்கிய விக்ரம்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 82வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய முதல் சீசனை துவங்கிய நிலையில் அடுத்தடுத்த சீசன்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (22nd december 2023) episode promos

கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெற்றவருமூ பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்னும் 3 வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றுவருகிறது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 82வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோட்களில் என்ட்ரி கொடுக்கும் கமல்ஹாசன் அந்தந்த வாரத்திற்கான முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசி பஞ்சாயத்துகள் இருந்தால் அதை தீர்த்து வைத்து வருகிறார்.

களைகட்டிய ஃபிரீஸ் டாஸ்க்: அந்த வகையில் கடந்த சில தினங்களாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, நிக்சன் உள்ளிட்டவர்களின் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர். இதனிடையே நேற்றைய தினம் நிகழ்ச்சியில் ரவீனாவின் ஆன்ட்டி அவரையும் மணியையும் தொடர்ந்து கேள்வி கேட்டார். ரவீனாவின் கேமை விளையாட மணி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இவரது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்ததை பார்க்க முடிந்தது.

82வது நாளில் என்ட்ரி: இன்றைய தினம் நிகழ்ச்சி 82வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் பிரமோவில் ரவீனாவின் ஆன்ட்டி குறித்து மணி மற்றும் விக்ரம் பேசியதை பார்க்க முடிந்தது. இந்த உரையாடலில் ரவீனாவும் பங்கேற்றார். ரெண்டு பேரையும் அவர் அதிகமாக அசிங்கப்படுத்தி விட்டதாக மணி தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். ரவீனாவின் அம்மா வந்திருந்தால் பேசியிருப்பார்களா என்று மணி கேள்வி எழுப்ப, அவர் வந்திருந்தால் இன்னும் டபுளாக பேசியிருப்பார் என்று ரவீனா கூறுகிறார்.

மணி -ரவீனா லவ் விஷயம்: இவர்கள் இருவரின் லவ் விஷயத்திற்கு தற்போது ரவீனா மற்றும் மணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் நடந்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. ஆனால் இது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் இருவரும் தற்போது பேசி வருகின்றனர். என்ன தனியாக பேசிக் கொண்டிருப்பார்கள். தற்போது விக்ரமை இடையில் வைத்துக் கொண்டு பேசி வருகிறார்கள். எவ்வளவு காலத்திற்குதான் விக்ரம் இவர்கள் காதலுக்கு சாட்சியாக இருப்பார் என்று பார்க்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரவீனாவின் ஆன்ட்டி மற்றும் மணியின் அம்மா குறித்தும் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த கமெண்ட்கள் வெளியாகி வருகின்றன.

கடுப்பான மாயா -பூர்ணிமா: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் விக்ரம் மற்றும் அவரது தங்கை குறித்து மாயா மற்றும் பூர்ணிமா ஆதங்கத்துடன் பேசியதை பார்க்க முடிந்தது. அவர்கள், தங்களின் உறவை உடைப்பதாகவும் இனிமேல் விக்ரம் தனக்கு பிரெண்ட் கிடையாது என்றும் மாயா கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதனிடையே, விக்ரமின் தங்கை கொடுத்த அட்வைசில் விக்ரம் சிறப்பாக விளையாடினால் ஓகே தான் என்று பூர்ணிமா கூறுவதாகவும் இப்படி ஒரு கப்பை வாங்குவதற்கு அவர் அசிங்கப்பட வேண்டும் என்றும் மாயா கூறுகிறார்.

பூர்ணிமா கேட்ட கேள்வி: இந்த வாரம் தாக்குப்பிடிக்க முடியாமல் விக்ரம் வெளியேறினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று பூர்ணிமா கேட்க, மொக்கை, மூஞ்சியை கொண்டுபோய் எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று மாயா கேட்பதாகவும் இந்த பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. இடையிடையே இந்த பிரமோவில் விக்ரம், மணியும் காட்டப்பட்டுள்ளனர். இடையில் விக்ரம் ஓ மை காட் என்று கூறுவதாகவும் அமைந்துள்ளது. மாயா மற்றும் பூர்ணிமாவின் இந்த பேச்சை கேட்டு அவர் ரியாக்ட் செய்வதாக இந்த பிரமோவில் அமைந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இந்த பிரச்சினை எப்படி போகும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X