Bigg boss 7: போட்டியாளர்கள் விளையாட்டில் நேர்மை இருந்ததா.. கமல் கேட்ட கேள்வி!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 90வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோடான இன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். முன்னதாக கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். பலரின் சோகத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் மெயின் அட்ராக்ஷனாக கமல்ஹாசன் இருந்த போதிலும் இந்த 7வது சீசனில் பல்வேறு விமர்சங்களை சந்தித்து வருகிறார். பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்த விவகாரம், மாயாவின் செயல்களுக்கு கேள்வி எழுப்பாதது என பல விஷயங்களை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனுடன் அவர் விடை பெற போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனில் அவருக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vijay TVs Bigg boss tamil 7 shows today (30th december 2023) episode promos

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனின் 90வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. வாரயிறுதி எபிசோடான இன்றைய தினத்தில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பிரமோக்களில் பேசிய கமல்ஹாசன், விஜயகாந்தின் மறைவிற்கு தன்னுடைய சோகத்தை பலரின் சோகத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதை தன்னுடைய கடமையாக நினைப்பதாக குறிப்பிட்டார். விஜயகாந்த் குறித்து நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதைவிட அவர் குறித்து நினைத்து புன்னகைப்பதற்கு நிறைய விஷயங்களை அவர் விட்டு சென்றுள்ளதாகவும் கமல் பேசினார்.

விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சி: விஜயகாந்த் போல வாழ முடியுமா என்று யோசித்தால், அவர் வாழ்ந்த மற்றும் நாம் வாழப் போகும் வாழ்க்கைக்கும் அர்த்தம் கிடைக்கும் என்றும் இன்றைய தினத்தின் முதல் பிரமோவில் கமல்ஹாசன் பேசியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது பிரமோவில் பேசிய கமல், கடந்த வாரத்தில் ஹவுஸ்மேட்சின் பெற்றோர், உறவினர்கள் வந்ததையும் அதற்கு முந்தைய வாரம் வீட்டில் கலை சூழ்ந்திருந்ததையும் சுட்டிக் காட்டினார். தற்போது அவையனைத்தும் விலகி போட்டி மும்முரமாகியுள்ளது குறித்தும் அவர் பேசினார். தற்போது போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளது குறித்து கமல் குறிப்பிட்டார்.

போட்டியாளர்கள் நேர்மை குறித்து கேள்வி: போட்டியாளர்கள் விளையாட்டில் நேர்மை இருந்ததா இல்லையா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று கமல் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ பைனல் டாஸ்க்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஹவுஸ்மேட்ஸ் மிகவும் தீவிரமாக செயல்பட்டு அதிகமான புள்ளிகளை பெற்று வருகின்றனர். மேலும் தினேஷ் அர்ச்சனாவிடையே போட்டி அதிகரித்து காணப்படுகிறது. அவருடைய மனைவியை வைத்து தினேஷை, விசித்ரா திட்டியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

ரசிகர்கள் கமெண்ட்: இந்நிலையில் விஷ்ணு மற்றும் மாயா, பூர்ணிமா கேங்கிடையிலும் அதிகமான போட்டி, பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதைத்தான் தற்போது கமல்ஹாசன் சுட்டிக் காட்டியுள்ளார். இவர்களது விளையாட்டில் நேர்மை இருந்ததா என்று கமல் கேள்வி கேட்டுள்ள நிலையில், அது மிஸ்ஸிங்தான் என்று ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்துதான் இன்றைய தினத்தில் கமல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, பூர்ணிமாவை கமல் வறுத்தெடுத்து வரும் சூழலில், இன்றைய தினம் அவரிடம் பூர்ணிமா எப்படி நடந்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X