Bigg boss 7: முதல்ல ஏத்துக்கிட்டீங்க.. இப்ப நடிப்புங்கறீங்க.. விசித்ராவிடம் மல்லுகட்டிய அர்ச்சனா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய தினம் 95வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவு பெறவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் புத்தாண்டை கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ் பொங்கல் பண்டிகையை தங்களது வீட்டில்தான் கொண்டாடுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் டைட்டிலை எப்படியாவது தட்டித் தூக்க வேண்டும் என்பதில் அனைத்து போட்டியாளர்களும் உறுதியுடன் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் கேங் கேங்காக பிரிந்து ஒருவரையொருவர் குற்றம் சொல்வதும் சண்டை, சச்சரவு, கலாட்டா என போட்டியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றது. தொடர்ந்து டிக்கெட் டூ பைனல் டாஸ்க்குகள் நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களாக நிகழ்ச்சியில் பணப்பெட்டி வைக்கப்பட்டு அதையொட்டிய செயல்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணப்பெட்டியை தட்டித் தூக்கப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனிலும் எண்ட் கார்ட் போடவுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் துவக்கம் முதலே தொகுத்து வழங்கி வரும் நிலையில், இது நிகழ்ச்சிக்கான ஒரு சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாகவும் அமைந்துள்ளது. தன்னுடைய நிதானமான மற்றும் அழுத்தமான பேச்சுக்களால் இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி எபிசோட்களை களைகட்ட செய்துவருகிறார் கமல்ஹாசன். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு டாஸ்க்குகள், வைல்ட் கார்ட் என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்கள் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.
வித்தியாச முயற்சிகள்: கடந்த சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு ரெண்டு பட்டது. இதேபோல டபுள் எவிக்ஷன், மிட்வீக் எவிக்ஷன் என அடுத்தடுத்த விஷயங்களையும் நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர்கள் புகுத்தினர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று வருகிறது. இன்றைய தினம் 95வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி நிகழ்ச்சியில் களைகட்டியுள்ளது. இன்றைய தினம் வெளியான முதல் பிரமோவில் பணப்பெட்டி குறித்து காட்டப்பட்டுள்ளது.
பணப்பெட்டியை தூக்கப்போவது யார்?: மூன்று நாட்களாக பணப்பெட்டி காத்திருக்கும் சூழலில் இந்தப் பெட்டியை யார் தூக்கிக் கொண்டு போவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் அர்ச்சனாவும் விசித்ராவும் அடித்துக் கொண்டதை பார்க்க முடிந்தது. அர்ச்சனாவின் நடவடிக்கை எதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்று விசித்ரா குற்றம் சாட்டுகிறார். துவக்கத்தில் வேறு மாதிரியாக இருந்ததாகவும் திடீரென நெகட்டிவ்வாக மாறியதாகவும் விசித்ரா கூற, அர்ச்சனா பொங்கியதை பார்க்க முடிந்தது. தன்னுடைய துவக்ககால நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டதாகவும் தற்போது அது நடிப்பு என்று கூறுவதாகவும் அவர் காட்டத்துடன் குறிப்பிட்டார்.
மல்லுக்கட்டிய விசித்ரா -அர்ச்சனா: தொடர்ந்து பேசிய விசித்ரா, எல்லாவற்றிற்கும் எதிராக பேசிய அர்ச்சனா, தற்போது மிகவும் சாதுவாக மாறியுள்ளது தன்னை கேள்வி கேட்க வைத்துள்ளதாக கூறுகிறார். நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் தான் சண்டை போடாமல் இருக்க நினைப்பதாக அர்ச்சனா கூற, நிகழ்ச்சியில் துவக்கத்திலேயே இந்த நடைமுறையை அவர் பின்பற்றியிருக்கலாமே, நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தவுடனேயே ஏன் சண்டை போட வேண்டும் என்று நினைத்திருக்கலாமே என்று விசித்ரா கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் இருவரும் காச்மூச் என்று சண்டை போடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











